'ராக் ஸ்டார்' அனிருத் வெளியிட்ட 'ராக்கெட் டிரைவர்' பட பாடல்!

24 Aug, 2024 | 04:02 PM
image

நடிகர் விஸ்வத் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ராக்கெட் டிரைவர்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'குவாண்டம் பாய்ச்சல்' எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையிசையுலகின் சக்கரவர்த்தியாக திகழும் 'ராக் ஸ்டார்' அனிருத் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 

இயக்குநர் ஸ்ரீராம் ஆனந்தசங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ராக்கெட் டிரைவர்' எனும் திரைப்படத்தில் விஸ்வத், சுனைனா, நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன், ராமச்சந்திரன், துரைராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரெஜிமல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌஷிக் கிரிஷ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்டோரீஸ் பை தி ஷோர் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரித்திருக்கிறார். 

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற 'வெட்ட வெளியில் தன்னந்தனியாய்...' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் ஹிர்தேஷ் ராஜ் எழுத, பின்னணி பாடகி சுஷா பாடியிருக்கிறார். இந்தப் பாடலின் காணொளியில் மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல்கலாம் இடம்பெற்றிருப்பது பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46
news-image

ஸ்வீட் ஹார்ட் - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:57:00
news-image

பெருசு - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:47:48
news-image

ராபர் - திரை விமர்சனம்

2025-03-14 18:26:12
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-14 17:41:17
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த 'எமகாதகி'...

2025-03-13 18:32:12
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ட்ராமா'...

2025-03-13 18:31:45
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'சக்தி திருமகன்'...

2025-03-13 18:25:30
news-image

நடிகை சௌந்தர்யா மரணத்தில் மோகன்பாபுவுக்கு தொடர்பா?...

2025-03-13 10:29:57