எம்முடைய வீடுகளில் உயர்கல்வி கற்று அரசாங்க ஊழியராகவோ அல்லது தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியராகவோ பலர் இருப்பர். இவர்களுக்கு உரிய வயதில் திருமணம் என்பது எட்டா கனியாகவோ அல்லது நிறைவேறாத ஆசையாகவௌ நீடித்துக் கொண்டிருக்கும். ஆண் பிள்ளையாக இருந்தாலும் அல்லது பெண் பிள்ளையாக இருந்தாலும் வீட்டில் சுப நிகழ்வு நடைபெறாமல் தாமதம் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இது தொடர்பாக மூத்த குடும்ப உறுப்பினர்கள் சோதிட நிபுணர்களை அணுகி ஆலோசனை கேட்டு, அதற்கான பரிகாரத்தையும் மேற்கொண்டிருப்பர். ஆனாலும் திருமண முயற்சிகளில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
அதே தருணத்தில் வேறு சிலர் இன்றைய திகதியில் மக்களுக்கு பயன்படும் தொழில்நுட்பத்தை பற்றிய அனைத்து விவரங்களையும் கற்றிருப்பர். மேலும் இதனை முன்வைத்து தொழில் தொடங்கவும் விருப்பமாக இருப்பர். இவர்களுக்கு இவர்களுடைய திட்டத்தை மதிப்பிட்டு வங்கிகளும் கடன் உதவி அளிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கும். ஆனாலும் பணிகள் நடைபெறாமல் ஏதேனும் ஒரு சிறிய காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
உங்களுக்கு ஒரு விடயத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு இருந்தும், தகுதி இருந்தும், அவை சாத்தியப்படவில்லை என்றால்... உங்களுக்கு உங்களுடைய குலதெய்வத்தின் பரிபூரண ஆசி இல்லை என்பது தான் இதன் சூட்சமமான பொருள். இந்த தருணத்தில் எம்முடைய குல தெய்வத்தினை பற்றிய குறிப்புகளும், குலதெய்வம் எது? என்பதனை கண்டறிவதற்கான வழிமுறைகளும், குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கான எளிய பரிகாரத்தினையும் எம்முடைய முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் உங்கள் வீடுகளில் உள்ள பூஜை அறையில் ஆறு விளக்குகளை ஏற்றுங்கள். அந்த விளக்கில் இலுப்பெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை கலந்து தீபம் ஏற்றுங்கள். இதனுடன் நைவேத்தியமாக காய்ச்சாத பாலை ஒரு கோப்பை படைக்க வேண்டும். இதன் பிறகு உங்களது குலதெய்வம் குறித்தும், அதன் அருள் வேண்டும் என்றும், ஒரு முகமான சிந்தனையுடன் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள்.
மூன்று பௌர்ணமிகளை நிறைவு செய்த பிறகு உங்களது குலதெய்வம் குறித்த குறிப்புகள் உங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் கனவில் வரக்கூடும் அல்லது குலதெய்வம் குறித்த பயனுள்ள குறிப்புகளை உங்களுக்கு அறிமுகமான மற்றும் அறிமுகமற்ற நபர்கள் மூலம் உங்களை வந்தடையும். அதன் பிறகு குலதெய்வ ஆலயத்திற்கு சென்று குலதெய்வத்தை முறையாக வழிபட்டவுடன் உங்களது தடைபட்ட முயற்சிகள் தடையின்றி நிறைவேறுவதை அனுபவத்தில் காணலாம். திருமண முயற்சிகளும் விரைவில் கைகூடி வருவதை அனுபவத்தில் உணரலாம். எனவே குலதெய்வத்தின் அருளை பெற எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் மேலே குறிப்பிட்ட எளிய பரிகாரத்தை பௌர்ணமி தினத்தில் மேற்கொண்டு சுப பலன்களை பெற வேண்டும் என வாழ்த்துகிறோம்.
தொகுப்பு சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM