எம்மில் சிலருக்கு கடுமையான கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு அவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்குவதற்காக ஒரு வைத்தியசாலையிலிருந்து வேறொரு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவதற்காக அம்பியூலன்ஸ் மூலமாக பயணிக்கும் போதும் கடும் முன்னெச்சரிக்கையுடன் போதுமான மருத்துவ உதவியுடன் பயணிக்க வேண்டியதிருக்கும்.
இதன் போது ஏதேனும் சிறிய அளவிலான குறைபாடுகள் ஏற்பட்டாலும்... நோயாளியின் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் பாரிய பக்க விளைவு ஏற்பட்டு மூளை சாவு அடைந்து விடுவர். இதனால் கடுமையான கல்லீரல் செயலிழப்பு பாதிப்பிற்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வைத்திய நிபுணர்கள் உயர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.
கடுமையான கல்லீரல் செயலிழப்பு என்பதை மருத்துவ மொழியில் ஃபுல்மினன்ட் ஹெபடிக் ஃபெயிலியர் என குறிப்பிடுகிறார்கள். பொதுவாக இத்தகைய பாதிப்பு நாட்பட்ட கல்லீரல் நோய் பாதிப்பு இல்லாதவர்களுக்கும், பொதுவாக கல்லீரல் நோய் தாக்காத ஒரு நபருக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இது ஹெபடைடிஸ் 'ஏ' மற்றும் 'சி' வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாகவும் இவை உண்டாகும். வேறு சிலருக்கு காச நோய் மற்றும் வலிப்பு பாதிப்பினை கட்டுப்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருக்கும் மருந்தியல் சிகிச்சையினை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போதும் .. அதனுடைய பக்க விளைவின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு திடீரென்று ஏற்படக்கூடும்.
வேறு சிலருக்கு தோல், கண், இமைகள் ஆகியவற்றில் மஞ்சள் நிற மாற்றம் , வயிற்றின் மேல் பகுதியில் வலி, வயிறு வீக்கம், குமட்டல், வாந்தி, குழப்பம், நடுக்கம் ஆகிய அறிகுறிகள் இருந்தாலும்.. கல்லீரல் திடீரென்று செயல் இழக்கக் கூடும். இந்த அறிகுறிகள் ஏற்பட்டவுடன் அருகில் உள்ள வைத்திய நிபுணரை சந்தித்து சிகிச்சையும், ஆலோசனையும் மேற்கொள்ள வேண்டும். இதனை புறக்கணித்தால் சிறுநீரக செயலிழப்பு, தொற்று பாதிப்பு, ரத்தம் உறையாமை பாதிப்பு தொடர்பான ரத்த குறைபாடுகள், மூளை வீக்கம்.. போன்ற உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
இதன் போது வைத்தியர்கள் குருதி பரிசோதனை, சிடி ஸ்கேன் பரிசோதனை எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை, கல்லீரல் திசு பரிசோதனை போன்றவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். இத்தகைய நிலைக்கு பிளாஸ்மா மாற்று சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை தான் சிறந்த தீர்வு என வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள். இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வாழ்வியல் நடைமுறைகளை உறுதியாக பின்பற்றும் போது இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணம் பெறலாம்.
வைத்தியர் ஜோய் வர்கீஸ் தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM