கொழும்பு நகரில் சேரும் குப்பைகளுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுத் தருவதாக ஜப்பான் உறுதிமொழி வழங்கியுள்ளது.

மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் விசேட அத்தியாவசிய ஒரு தொகை நிவாரணத்தை நேற்று விமானத்தின் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த நிவாரணப்பொருட்கள் இடர்முகாமைத்துவ அமைச்சில் இடர்முகாமைத்துவ அமைச்சிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்டது. 

இலங்கையிலுள்ள ஜப்பான் நாட்டுக்கான தூதுவர் கொனிச்சி சுகுனாமா, பொருட்களை இடர்முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கையளித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பாக விரைவாக ஆராய ஜப்பான் உதவிகளை வழங்கும் என்பதோடு கொழும்பில் சேரும் குப்பைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுகொடுக்க ஜப்பான் உதவும் எனவும் இலங்கையிலுள்ள ஜப்பான் நாட்டுக்கான தூதுவர் கொனிச்சி சுகுனாமா தெரிவித்தார்.

கூடாரங்கள், மெத்தைகள், நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், மலசலக் கூடங்கள் உட்பட பல நிவாரண பொருட்களை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம், கொனிச்சி சுகுனாமா கையளித்தார்.