லிந்துலையில் சிறுவனை சித்திரவதைக்கு உட்படுத்திய சிறிய தாய் கைது!

24 Aug, 2024 | 10:25 AM
image

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் வசிக்கும் 10 வயது சிறுவனொருவன் தனது சிறிய தாயாரினால் கடந்த சில தினங்களாக கொடூர சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.   

சிறுவன் சிறிய தாயாரினால் அடிக்கப்பட்டு மோசமான சித்திரவதைகளை அனுபவித்துள்ளதாகவும் அதனை விசாரித்து அறிந்த பாடசாலை சமூகம் லிந்துலை பொலிஸ் இணையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.  

சித்திரவதைக்கு உள்ளான சிறுவன் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (23) மாற்றப்பட்டுள்ளார். 

அதேவேளை சிறுவனின் சிறிய தாயாரை வரவழைத்து பொலிஸார் விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளனர். விசாரணைகளை தொடர்ந்து அந்த பெண் லிந்துலை  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, இன்றைய தினம் (24) நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.  

கைது செய்யப்பட்ட பெண் ஒரு குழந்தையின் தாய் என்பதோடு, தற்போது அவர் ஒரு கர்ப்பிணிப் பெண் எனவும் கூறப்படுகிறது. 

அத்தோடு, கொடூர சித்திரவதைக்கு உள்ளான சிறுவனின் தாய் கொழும்பில் பணியாற்றி வருவதும், அவர் தனது மகனை சிறுவனின் சிறிய தாயாரிடம் பாதுகாப்புக்காக விட்டுச் சென்றுள்ளமையும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.  

இந்த சிறுவன் இவ்வருடம் நடைபெறவிருக்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள, நாகசேனை பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வயலிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு ;...

2025-06-13 10:10:33
news-image

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி...

2025-06-13 09:58:33
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-06-13 09:53:02
news-image

நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ...

2025-06-13 09:32:06
news-image

இன்றைய வானிலை 

2025-06-13 06:11:23
news-image

யாழ். மாநகரசபை மேயர் தெரிவு இன்று;...

2025-06-13 05:16:32
news-image

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார்...

2025-06-13 05:14:37
news-image

போரா மாநாட்டுக்கு அவசியமான வசதிகளை வழங்க...

2025-06-13 05:13:08
news-image

லொக்கு பெட்டி பயன்படுத்திய 2 துப்பாக்கிகள்...

2025-06-13 05:08:14
news-image

கொழும்பு மேயராக சிறந்தவரை பெயரிட்டால் ஆதரவளிப்போம்...

2025-06-13 05:02:20
news-image

வெலிகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்; தேசபந்து தென்னக்கோன்,...

2025-06-13 04:59:33
news-image

ஜனாதிபதியின் செயலாளர், நீதிமைச்சின் செயலாளரை விசாரிக்க...

2025-06-13 02:36:19