இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்களுக்கு எதைத் தொட்டாலும் பிரச்சினைகள் தான். எனவே இதனால் அவர்களுக்கு மன நிம்மதி, சந்தோஷம் இருப்பதேயில்லை. திருமணம், குழுந்தைகள் பெற்றுக் கொள்ளுதல், தொழில் துவங்கி நடத்துதல் போன்ற எல்லா நிகழ்வுகளிலுமே மனிதர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பிரச்சினைகள் தலையெடுக்கின்றன.
பிரச்சினைகள் எல்லா பக்கத்திலிருந்தும், எல்லா ரூபத்திலும் வந்து கொண்டேயிருக்கின்றன. அதனால் தான் பெரியவர்கள் “பிரச்சினைகள் இல்லாத மனிதர்களும் இல்லை, அர்ச்சனைகள் இல்லாத ஆலயமும் இல்லை ”என்று சொல்லி வைத்தார்கள்.
சரி பிரச்சினைகள் எல்லோரிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது, அதற்கெல்லாம் ஒரு தீர்வே கிடையாதா? என்று கேட்டால், கண்டிப்பாக இருக்கிறது. கஷ்டத்தில் உள்ள ஒருவருக்கு, திடீரென நூறு மில்லியன் ரூபாய் கிடைத்து விடுகிறது. அவர் நினைத்தால், அவருடைய பிரச்சினைகள் எல்லாம் உடனே தீர்ந்து விடும்.
இனி எந்தத் துன்பமும் இல்லை, இனி எல்லாமே சந்தோஷம் தான் என்று இருக்கலாம். ஆனால் அவர் அடைந்ததெல்லாம் தெளிவில்லாத வாழ்க்கை, பதற்றம், நோய்கள் ஆகியவைதான். ஆகவே கைநிறைய காசு இருந்தாலும் துன்பம், ஒன்றுமே இல்லாவிட்டாலும் துன்பம் தான்.
அறம் நிறைந்த வாழ்க்கை, அருள் பொதிந்த வாழ்க்கை, வாழ்க்கையின் நோக்கத்தை உள்ளபடியே உணர்ந்து வாழவேண்டிய வாழ்க்கைக்கு என்னலெல்லாம் தேவையோ...! அவை அத்தனையையும் தங்களுடைய அறநூல்களிலும், வேத நூல்களிலும் ரிஷிகளும், மகான்களும், சித்தர்களும் மிகத்தெளிவாகச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்கள்.
திருவருட்பா, திருவாசகம், திருமந்திரம், திருக்குறள், பகவத் கீதை, திருக்குரான், பைபிள் ஆகியவற்றில் மனித குல மேம்பாட்டிற்காகச் சொல்லவேண்டிய அனைத்துமே சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் இன்றைய இயந்திர வாழ்க்கையில் மனிதர்கள் மேற்கண்ட அற்புத அறநூல்கள் எதையும் கற்றுக்கொள்வதேயில்லை. பொருள், சேர்ப்பது, ஆட்டம், பாட்டம், போதை என காணாத ஒன்றை இல்லாத ஒன்றை கண்டு கொண்டிருக்கிறார்கள்.
இவற்றிலிருந்து மனிதன் திரும்ப வேண்டும். “பொய் பானம் கண்டு புலம்பக்கூடாது, இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து மயங்கக் கூடாது” என்பதற்காகத்தான் கடவுள் நிதர்சனமான உண்மையை மனிதர்களுக்கு உரைக்கின்ற வகையிலே உணர்த்தும் பொருட்டு பூகம்பங்களையும், வெள்ளப் பரிதாபங்களையும், உயிர்களை கொள்ளை கொள்ளையாய் அள்ளிப் போகின்ற சாக்காட்டு நோய்களையும், நாடுகளிடையே பெரும் உயிர் பலியை ஏற்படுத்துகின்ற மனிதனை அழிக்கும் போர்களையும், சோலார் பிளாஸ் என்ற சொல்லப்படும் அதீத வெப்ப அலைகளையும் உருவாக்கி பாடம் புகட்டுகின்றார்.
நாசாவின் அண்மை ஆய்வு அறிக்கையின்படி, மேலே சொல்லப்பட்ட பேரிடர்களின் மூலிகை 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் இலட்சக் கணக்கான மனிதர்கள் மரணத்தின் பிடியிலே சிக்கி அழியப் போகின்றார்கள். உயிருடன் இருப்பவர்கள் தோல்வியாதிகள் வரப்பெற்று பைத்தியம் பீடித்து முடிவில் அழிந்தே போவார்கள்.
பல நாட்டுத் தலைநகரங்கள் நீரில் மூழ்கி காணாமல் போய் விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை “சமிங்கையாகவே” எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
மனிதர்கள் இன்றைய வாழ்க்கைக்கான தேடல்களை மட்டும் மேற்கொள்ளாமல், இன்றைய இயந்திர வாழ்க்கையை சற்றே ஒதுக்கி வைத்து, மறுமை சுகத்திற்கானவற்றையும் செய்து கொள்ள வேண்டும். பேரழிவுகளிலிருந்து நம்மைப் பாதுகொள்ள வேண்டும். மனிதர்கள் “ஞானப்புரிதலை” அடையவேண்டும்.
அப்போது, தான் உலகமானது சமநிலையைப் பெறும். பொருள் உலகத்தை பெரிதும் நேசிக்கின்றவர்கள், சிறிது அருள் உலகத்தையும் நோக்கி நகர்தல் அவசியமாகும், அங்ஙனம் செய்தால் மனம் அமைதி அடையும், உடல் வலுப் பெறும், ஆயுள் அதிகரிக்கும், சொல்லப் போனால் தனி மனிதனோடு உலகம் முழுவதுமே மாற்றங்களைப் பெறும். இதற்காக நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை.
நம் சித்தர்களும், அருளாளர்களும் எண்ணற்ற மந்திரங்களையும், அறநூல்களுயும், வேதநூல்களையும் வழங்கிச் சென்றுள்ளார்கள். மேலும் பிறவிப் பெருங்கடலை நீந்தி மாயைகள் அகலப்பெற்று இறைவனின் பெருங்கருணையை அடைந்திட சித்தர் பெருமக்கள் ஆயிரம் ஆயிரம் வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துருக்கின்றார்கள்.
அவற்றில் யோக வழிமுறைகள் மிகவும் முக்கியமானதாகும். வாசி யோகம், குண்டலினி யோகம், ராஜயோகம், அஷ்டாங்க யோகம், விபாசன யோகம், நவகண்ட யோகம், சிவராஜ யோகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். யோகத்தில் கைதேர்ந்த ஏதாவது ஒரு சிறந்த குருவின் வழிகாட்டுதலுடன் உபதேசம் பெற்று யோகக் கலையில் வயித்தாலும் வாழ்க்கை வளம் பெறவது உறுதி.
- மகாவிஷ்ணு.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM