வவுனியா சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். 

வவுனியா சிறைச்சாலையில் இருந்த 45 வயதுடைய யு. நிசாந்த் நோய்வாய்ப்பட்ட நிலையில், நேற்று வவுனியா போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

எனினும் குறித்த கைதி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்தார். 

சடலம் தற்போது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது. 

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.