உலகளவில் ஆண்டுதோறும் ஐந்து மில்லியன் மக்கள் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என அண்மைய ஆய்வினை சுட்டிக்காட்டி உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருக்கிறது.
மேலும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் அளிக்க முடியும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
வளரும் நாடுகளில் வலிப்பு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும் வலிப்பு நோயை முழுமையாக நிவாரணம் அளிப்பதற்காக நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட பக்க விளைவுகள் அற்ற மருந்தியல் சிகிச்சைகள் சிறந்த நிவாரணத்தை வழங்குகிறது என்றும், இதனால் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் எழுபது சதவீதத்தினர் முழுமையான நிவாரணம் பெறுகிறார்கள் என்றும், மீதமுள்ள முப்பது சதவீதத்தினரில் பத்து சதவீதத்தினர் இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பிரத்யேக நவீன சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் பெறுகிறார்கள் என்றும், ஆனால் இது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடத்தில் இல்லை என்றும் வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது கண்டறியப்பட்டிருக்கும் இருபதிற்கும் மேற்பட்ட நவீன மருந்தியல் சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் அளிக்கப்படுகிறது. மருந்தியல் சிகிச்சையால் கட்டுப்படுத்த பட இயலாத வலிப்பு நோயை சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்க முடியும்.
இவர்களுக்கு தற்போது ரிசெக்டிவ் சர்ஜேரி, லேசர் இண்டர்ஸ்டிடியல் தெர்மல் தெரபி, டீப் பிரெய்ன் ஸ்டிமுலேஷன், கார்பஸ் கால்ஸோடோமி , ஹெமிஸ்பெக்டோமி, ஃபங்ஷனல் ஹெமிஸ்பெக்டோமி போன்ற நவீன சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு முழுமையான நிவாரணம் வழங்கப்படும்.
மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணம் கிடைக்கப் பெறாத முப்பது சதவீதத்தினரில் பத்து சதவீதத்தினர் மேற்கண்ட நவீன சத்திர சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணத்தை பெறுகிறார்கள் என்றும், ஏனைய இருபது சதவீதத்தினர் தங்களின் பாதிப்பின் வீரியத்தை குறைத்துக் கொள்ள இயலும் என்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதே தருணத்தில் வலிப்பு நோய் பாதிப்பிற்காக மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சைகளில் சிலருக்கு பக்க விளைவு ஏற்படக்கூடும் என்பதனால், சத்திர சிகிச்சைக்குப் பிறகு வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பில் தொடர்ச்சியாக ஓராண்டுகள் வரை இருக்க வேண்டியதிருக்கும் என்றும் வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வைத்தியர் ராஜேஷ்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM