திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த குடும்பத்தினர் 25 கிலோ தங்க நகை அணிந்து சென்று பூஜை வழிபாட்டில் ஈடுபட்டமை தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியாவின் ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலுக்கு மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மூன்று பேர் சுவாமி தரிசனம் செய்யச் சென்றிருந்தனர்.
இவர்கள் மூன்று பேரும் கழுத்து மட்டுமின்றி கைகளிலும் ஏராளமான தங்க நகைகள் அணிந்திருந்தனர். அந்த நகைகளின் எடை சுமார் 25 கிலோ என கூறப்படுகிறது.
இவர்களை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
உடலில் ஏராளமான தங்க நகைகளை அணிந்து சுவாமி தரிசனம் செய்யச் சென்ற இவர்களை, ஆலயத்துக்கு வந்திருந்த மற்ற பக்தர்கள் விநோதமாக பார்த்ததுடன், தங்கள் செல்போனில் புகைப்படமும் வீடியோவும் எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM