வெற்றி நடிக்கும் 'ஆலன்' படத்தின் புதிய பாடல் வெளியீடு

Published By: Digital Desk 7

23 Aug, 2024 | 04:33 PM
image

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நம்பிக்கை தரும் நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் வெற்றி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஆலன்' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஏன் அணைந்தாய்..' எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆர்.சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆலன்' எனும் திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, 'அருவி' மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை 3 எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆர். சிவா தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களும், பாடலுக்கான வீடியோவும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஏன் அணைந்தாய்..' எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுத, பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான ஷான் ரோல்டன் பாடி இருக்கிறார்.  ஷான் ரோல்டனின் மயக்கும் குரலில் காதலை பற்றிய உணர்வுபூர்வமான பாடல் வரிகளுடன் இந்தப் பாடல் வெளியாகி இருப்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right