மன்னாரில் மாபெரும் மீனவர் போராட்டத்திற்கு வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் அழைப்பு!

23 Aug, 2024 | 08:23 PM
image

மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மாபெரும் போராட்டம் ஒன்றினை எதிர்வரும்   செப்டம்பர் மாதம் 10ம் திகதி   முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் அறிவித்துள்ளது. 

மன்னார் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (23) இடம் பெற்ற வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டதிலேயே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிரச்சினை, உள்ளூர் இழுவைமடி பிரச்சினை, தடை செய்யப்பட்ட மீன்பிடி  பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கட்டுப்படுத்தக் கோரியே இப் போராட்டம் நடாத்தப்படவுள்ளது.

இதே வேளை வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்திற்க்கு புதிய நிருவாகமஹ தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் தலைவராக கிளிநொச்சி மாவட்ட மீனவ பிரதிநிதி ஜோசப் பிரான்சிஸ் அவர்களும்,  செயலாளராக மன்னார் மாவட்டத்திலிருந்து மீனவ பிரதிநிதி முகமட் ஆலம் அவர்களும்,  பொருளாளராக யாழ்ப்பாணத்திலிருந்து பிரியா தெரிவு செய்யப்பட்டதுடன் உப தலைவராக முல்லைத்தீவு பிரதிநிதி தணிகாசலம் அவர்களும்,  உப செயலாளர் மன்னார் மாவட்டத்திலிருந்து  றீற்ரா வசந்தி அவர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன் மாவட்ட தலைவர்களாக  யாழ்ப்பாணம்   இ. முரளிதரன், கிளிநொச்சியிலிருந்து அமலதாஸ், மன்னார் மாவட்டத்திலிருந்து அன்ரனி சங்கர், முல்லைத்தீவு அ.நடனலிங்கம், ஊடக பேச்சாளராக அன்னலிங்கம் அன்னராசா  உட்பட 16 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி,  முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 56 பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், பிரதம அழைப்பாளராக கலாநிதி சூசைதாஸன் , தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தேசிய அமைப்பாளர் கேர்மன் குமார ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின்...

2024-10-15 02:23:54
news-image

பிரதமரிடம் 14 வயதுடைய பாடசாலை மாணவி...

2024-10-15 01:56:57
news-image

உலக முடிவு பள்ளத்தாக்கில் கீழே தள்ளி...

2024-10-14 21:42:22
news-image

சீரற்ற காலநிலையினால் 158,391 பேர் பாதிப்பு;...

2024-10-14 20:21:00
news-image

மட்டக்களப்பில் மோட்டார்சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி...

2024-10-14 20:06:41
news-image

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் வாகனமொன்றினை...

2024-10-14 19:44:07
news-image

ஆயுர்வேத வைத்தியரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை...

2024-10-14 21:39:04
news-image

தமிழரசின் தலைவர், பொதுச்செயலாளர், நிர்வாக செயலாருக்கு...

2024-10-14 21:25:30
news-image

யானை சின்னத்தின் வெற்றிக்கு எவ்வாறு வியூகங்களை...

2024-10-14 17:57:12
news-image

இரவு நேர களியாட்ட விடுதிகளில் சுற்றிவளைப்பு...

2024-10-14 17:44:44
news-image

தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் இன்று...

2024-10-14 17:43:47
news-image

துணைவிமானியை விமானியறையிலிருந்து வெளியே தள்ளிப்பூட்டிய விமானி...

2024-10-14 17:25:55