இரு மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் கைது

Published By: Digital Desk 7

23 Aug, 2024 | 11:58 AM
image

கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கதிர்காமம் பொலிஸாருக்கு நேற்று வியாழக்கிழமை (22) கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

49 வயதுடைய பாடசாலை அதிபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

08 மற்றும் 09 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரான அதிபர் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஒரு மாணவனையும் ,2023 ஆம் ஆண்டில் மற்றைய மாணவனையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரு மாணவர்களும் விளையாட்டு செயற்பாடுகளுக்காக பாடசாலைக்கு சென்றிருந்த போது உணவு உண்பதற்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அறையொன்றிற்குள் வைத்து இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்த முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44
news-image

மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கிய 5 ஆயிரம்...

2025-02-18 19:03:26
news-image

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய...

2025-02-18 19:05:16
news-image

வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை...

2025-02-18 20:12:13
news-image

மக்களின் வரிப்பணம் வீண்விரயமின்றி தேசிய அபிவிருத்திக்காகப்...

2025-02-18 17:37:46
news-image

ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப இவ் வருடத்துக்குள்...

2025-02-18 19:08:06
news-image

அரசாங்கத்துக்கு ஏற்றாற் போல எம்மால் அரசியல்...

2025-02-18 17:25:30
news-image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர...

2025-02-18 20:36:03
news-image

9 வருடங்களுக்கு பின்னரே அரச ஊழியர்களின்...

2025-02-18 19:08:47
news-image

பெற்றோரின் மீது சுமத்தப்பட்டுள்ள பிள்ளைகளின் கல்வி...

2025-02-18 17:27:45
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான கள...

2025-02-18 17:27:52
news-image

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை...

2025-02-18 19:14:47