(நெவில் அன்தனி)
பங்களாதேஷுக்கு எதிராக ராவல்பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியில் சவூத் ஷக்கீல், மொஹமத் ரிஸ்வான் ஆகியோர் 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 240 ஓட்டங்களின் உதவியுடன் பாகிஸ்தான் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்று பலமான நிலையை அடைந்தது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதலாவது இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பாகிஸ்தான், 6 விக்கெட்களை இழந்து 448 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தனது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.
சவூத் ஷக்கீல், மொஹமத் ரிஸ்வான் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அபார சதங்கள் குவித்தனர்.
அவர்களில் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய சவூத் ஷக்கீல் 261 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள் அடங்கலாக 141 ஓட்டங்களைப் பெற்றார். 11ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஷக்கீல் குவித்த 3ஆவது சதம் இதுவாகும்.
ஆரம்பத்தில் நிதானத்துடனும் பின்னர் ஆக்ரோஷத்துடனும் கிட்டத்தட்ட முழுநாளும் துடுப்பெடுத்தாடிய மொஹமத் ரிஸ்வான் 239 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 171 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
இது அவரது 3ஆவது டெஸ்ட சதமாக அமைந்ததுடன் அவர் பெற்ற 171 ஓட்டங்கள் அவரது தனிப்பட்ட அதிகூடிய டெஸ்ட் இன்னிங்ஸ் எண்ணிக்கையாக பதிவானது.
ஷக்கீல் ஆட்டம் இழந்த பின்னர் 6ஆவது விக்கெட்டில் அகா சல்மானுடன் 44 ஓட்டங்களைப் பகிர்ந்த ரிஸ்வான், பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் ஷஹீன் ஷா அப்றிடியுடன் மேலும் 50 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
அகா கான் 19 ஓட்டங்களையும் ஷஹீன் ஷா அப்றிடி ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஹசன் மஹ்முத் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷொரிபுல் இஸ்லாம் 77 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு கடைசி ஒரு மணி நேரத்தைத் தாக்குப் பிடித்து துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஷாத்மன் இஸ்லாம் 12 ஓட்டங்களுடனும் ஸக்கிர் ஹசன் 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM