ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேட்சை வேட்பாளரல்ல : தலதா அதுகோரலவுக்கு அருவருப்பு கிடையாதா ? - பொதுஜன பெரமுன

Published By: Vishnu

22 Aug, 2024 | 07:37 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேட்சை வேட்பாளரல்ல, அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார் என்பதை பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரலவின் கூற்றின் ஊடாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

நிமல் சிறிபாலடி சில்வா, பிரசன்ன ரணதுங்க ஆகியோரை ஊழல்வாதிகள் என்று விமர்சித்த தலதா அதுகோரல அந்த அணியின் பக்கம் செல்லவுள்ளமை அருவருப்பானது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை புதன்கிழமை (21) அநுராதபுரம் நகரில் நடத்தினோம். இந்த கூட்டத்தில் அநுராதபுர மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் எவரும் கலந்துக் கொள்ளவில்லை.இருப்பினும் அநுராதபுர மாவட்ட மக்கள் பெருமளவில் கலந்துக் கொண்டார்கள்.

தேசியத்தை காட்டிக் கொடுத்து சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுபவர்களை மீண்டும் கட்சியில்  இணைத்துக் கொள்ள வேண்டாம் என்று  அநுராதபுர மாவட்ட மக்கள் அழுத்தமாக வலியுறுத்தினார்கள். எவர் எங்களை விட்டுச் சென்றாலும் மக்கள் எம்முடன்  உள்ளார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிடவில்லை. அவர் ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவர் என்ற அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதை ஆரம்பத்தில் இருந்து திட்டவட்டமாக குறிப்பிட்டோம். நாங்கள் குறிப்பிட்டதை இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல உறுதிப்படுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல புதன்கிழமை (21) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், கட்சியின் பிரதித் தலைவரும் இருமுனைகளில் தேர்தலில் போட்டியிடுவதால் தனக்கு அரசியல் தீர்மானத்தை எடுக்க முடியவில்லை. ஆகவே தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதாக இருந்தால் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைவர் பதவியை வகித்துக் கொண்டு சுயேட்சையாக போட்டியிடுவதாக குறிப்பிட்டுக் கொள்கிறார்.எமது தரப்பினரும் அதை நம்பி அவருக்கு ஆதரவு வழங்க சென்றுள்ளார்கள்.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை மோசடியாளர்கள், ஊழல்வாதிகள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால் இன்று அவர்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பிரசன்ன ரணதுங்க ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். ஆனால் இன்று அவர்கள் இருக்கும் அணியின் பக்கம் அருவருப்பு இல்லாமல் செல்லவுள்ளார். இவ்வாறானவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து...

2025-02-13 19:21:19
news-image

ஜனாதிபதி தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட...

2025-02-13 19:17:48
news-image

ரஜரட்ட பல்கலையின் ஜப்பானிய மொழி ஆய்வகத்துக்கு...

2025-02-13 18:56:15
news-image

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள...

2025-02-13 18:49:17
news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:36:35
news-image

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 மூடை உலர்ந்த...

2025-02-13 18:15:25
news-image

மியன்மார் சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து...

2025-02-13 17:45:45
news-image

எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை...

2025-02-13 17:40:39
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2025-02-13 17:24:17
news-image

காணாமல்போன பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி...

2025-02-13 17:14:25
news-image

சிகிரியாவில் குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்...

2025-02-13 17:42:52
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-13 17:01:09