மன்னாரில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் ; வைத்தியர் பணியிடை நீக்கம் 

Published By: Digital Desk 3

22 Aug, 2024 | 04:14 PM
image

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்  உயிரிழந்த   இளம் குடும்ப பெண் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் வைத்தியர் பணியிடை நீக்கம்  செய்யப் பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்தார்.

அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான பெண் அதிக குருதி போக்கு காரணமாக கடந்த மாதம் 28 ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

எவ்வாறாயினும் அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியர் அவருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் வைத்தியர்களின் அசமந்த போக்கு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய ஏலவே நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு தாதியர்களுக்கும் இரண்டு குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர் களுக்கு இவ்வாறு பணியிடை நீக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவருக்கும் பணியிடை நீக்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த  வைத்தியர் சுகயீன விடுமுறையில் சென்றுள்ளார்.

குறித்த வைத்தியருக்கான பணியிடை நீக்கம் தொடர்பாக கடிதம் புதன்கிழமை(21) தனக்கு கிடைத்துள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்  அஸாத் எம் ஹனீபா தெரிவித்தார்.

எனினும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் சுகயீன விடுமுறையில் சென்றுள்ளமையினால் அவருக்கான பணியிடை நீக்கம் தொடர்பான கடிதம் அவரிடம் சமர்ப்பிக்கவில்லை.

எனினும், குறித்த கடிதம் அவருக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் பிரதி பதிவுத் தபால் மூலம் குறித்த வைத்தியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர்   வைத்தியர் அஸாத் எம் ஹனீபா மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'முழு நாடும் ஒன்றாக' தேசிய திட்டத்தின்...

2026-07-18 18:11:25
news-image

அடுத்த வாரம் சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை:...

2026-07-18 15:53:51
news-image

இராணுவத்தினரால் பறிக்கப்பட்ட மக்களின் காணி நிலங்களை...

2026-07-18 17:50:29
news-image

ஒட்டுசுட்டான் - தண்டுவான் பகுதியில் வீடுத்திட்டத்திற்கு...

2026-07-18 18:08:56
news-image

கரும்புள்ளியான் நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணப்...

2026-07-18 17:00:56
news-image

சி.டி. விக்கிரமரத்ன மரணம் : 10-க்கும்...

2026-07-18 16:38:27
news-image

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம் 25ஆவது...

2026-07-18 15:53:31
news-image

நாட்டில் தீவிரமடையும் டெங்கு : கடந்த...

2026-07-18 15:27:10
news-image

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகலவின்...

2026-07-18 15:20:54
news-image

நுளம்பு பெருக வழிவகுக்கும் சூழலை வைத்திருப்போர்...

2026-07-18 15:08:08
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்னுடன் மலேசிய...

2026-07-18 14:53:23
news-image

சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் மர்மமான முறையில்...

2026-07-18 14:41:15