முழங்கால் வலிக்கு Genicular Artery Embolization மூலம் சிறந்த நிவாரணம் - MIOT வைத்தியசாலையின் முகாமைத்துவப் பணிப்பாளர் வைத்தியர் பிரித்வி மோகன்தாஸ்

25 Aug, 2024 | 10:57 AM
image

வீ.பிரியதர்சன்

மயக்கம், அறுவை சிகிச்சை, தழும்புகளற்ற முறையில் கடுமையான முழங்கால் வலிக்கு ஜெனிகுலர் ஆர்டரி எம்போலைசேஷன் (Genicular Artery Embolization) சிகிச்சை மூலம் சிறந்த நிவாரணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக MIOT வைத்தியசாலையின் முகாமைத்துவப் பணிப்பாளர் வைத்தியர் பிரித்வி மோகன்தாஸ் தெரிவித்தார்.

MIOT இன்டர்நெசனல் வைத்தியசாலையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜெனிகுலர் ஆர்டரி எம்போலைசேஷன் (Genicular Artery Embolization) நிவாரண சிகிச்சை குறித்து MIOT வைத்தியசாலையின் முகாமைத்துவப் பணிப்பாளர் வைத்தியர் பிரித்வி மோகன்தாஸ் தொடர்ந்து விளக்குகையில்,

MIOT வைத்தியசாலை சென்னையில் மாத்திரமே உள்ளது. இங்கு சாதாரண நோய்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை. இங்கு பிரத்தியேகமான நோய்களுக்கு மாத்திரமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த MIOT வைத்தியசாலையை ஸ்தாபித்தமைக்கான நோக்கமே இதுதான்.

MIOT இன்டர்நெசனல் வைத்தியசாலை இந்தியாவின் சென்னையில் மணம்பாக்கத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. 63 சிறப்புப் பிரிவுகள் மற்றும் 250 முழுநேர மருத்துவர்களைக் கொண்ட இந்த வைத்தியசாலையில் ஆயிரம் படுக்கைகள் உள்ளன. இது 14 ஏக்கர் வளாகத்தில் நோயாளிகளுக்கு அதிசிறந்த சேவையை வழங்குகிறது.  விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட 3 ஆயிரம் ஊழியர்கள் இதில் பணியாற்றுகின்றனர்.

எம்மால் வழங்கப்படும் வைத்திய சேவைகள் சில இடங்களில் இல்லை. ஆனால் பிரத்தியேகமான நோய்களுடன் சிகிச்சைக்காக நோயாளர்கள் காத்திருக்கிறார்கள் என்றால் நாம் அங்கு சென்று வைத்திய சேவைகளை வழங்குகின்றோம்.

பிஜி தீவுக்கு எமது வைத்திய குழுவினர் சென்று அங்கு தங்கியிருந்து இதய சத்திர சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். MIOT வைத்தியசாலையின் தனி அலகு ஒன்றை 35 ஊழியர்களுடன் அங்கு தற்காலிகமாக உருவாக்கி வைத்திய தேவைகளை பூர்த்தி செய்கின்றோம். இந்தக் குழுவில் வைத்தியர்கள், தாதியர்கள், உயிரியல் மருத்துவ பொறியியலாளர்கள் போன்றோர் அடங்குவர். இவர்கள் இந்தியாவின் சென்னையில் இருந்து சென்று இவ்வாறு மருத்துவ சேவைகளை பிறிதொரு இடத்தில் வழங்குகின்றனர்.

அவ்வாறு தான் சீசல்ஸ் தீவில் MIOT வைத்தியசாலையினால் 4 மாடிகளைக் கொண்ட வைத்தியசாலை அலகொன்றை நடத்திவருகிறோம். இங்கு மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சைகளுக்காக நோயாளர்கள் தங்கியிருக்கவேண்டிய அவசியம் இல்லை. சத்திர சிகிச்சைகள் நிறைவடைந்ததும் நோயாளர்கள் வீட்டுக்குத் திரும்ப முடியும். கண் விழித்திரை சத்திர சிகிச்சை, பல், மூக்கு, தொண்டை தொடர்பான சத்திர சிகிச்சைகள், குழந்தைகளுக்கான சத்திர சிகிச்சைகளை வழங்குகின்றோம்.

இவ்வாறான தீர்வு அடிப்படையிலான வைத்தியசாலை அலகுகளை நாம் சென்னைக்கு வெளியில் உள்ள நாடுகளில் நடாத்தி வருகின்றோம்.

இலங்கையில் உள்ள நோயாளர்கள் MIOT வைத்தியசாலையின் தேவைகளைப் பெறவேண்டுமாயின், எங்களது தகவல் மையத்தை நாம் கொழும்பில் நிறுவியுள்ளோம். அந்த தகவல் மையத்தின் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி வைத்தியத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.

MIOT வைத்தியசாலை இந்தியாவின் சென்னையில்  மணப்பாக்கத்தில் அமைந்துள்ள அதேவேளை, இலங்கையில் MIOT வைத்தியசாலையின் தகவல் மையம் கொழும்பு - 3 கொள்ளுப்பிட்டி, குயின்ஸ் வீதி, இலக்கம் 30இல் அமைந்துள்ளது. 

கொழும்பில் உள்ள தகவல் மையத்தின் மூலம் சென்னைக்கு வந்து சிகிச்சை பெறுவதற்கு வீசா எடுப்பது, விமானப் பயணச் சீட்டை பெற்றுக்கொள்வது, குறிப்பாக இங்கு டெலி மெடிசின் ஆலோசனைகளை (telemedicine consultation) பெற்று மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும். 

டெலிமெடிசின் சேவை கொவிட்டுக்கு பின்னர் மிகவும் பிரபல்யம் அடைந்துள்ளது. இந்த டெலிமெடிசின் சேவை மூலம் முக்கியமாக சென்னைக்கு சென்றுதான் சிகிச்சை பெறவேண்டுமா அல்லது வேறு ஒரு நாட்டுக்குச் சென்று தான் சிகிச்சை பெறவேண்டுமா, இதனால் எவ்வளவு பணம் செலவாகும், இதில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன, சிகிச்சைக்கு எவ்வளவு காலம் செல்லும் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியும். இவை அனைத்தையும் கொழும்பில் உள்ள தகவல் மையத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியும். சிகிச்சை பெற்ற பின்னரும் எமக்கு வரும் சந்தேகங்களை கொழும்பில் உள்ள தகவல் மையத்தை அணுகி போக்கிக்கொள்ள முடியும்.

இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் வாழ்பவர்களுக்கு முடக்கு வாதம் (arthritis) பெரும்பாலும் முழங்காலைத்தான் தாக்குகிறது. பெரும்பாலும் நாம் உட்காரும் விதங்களில் காணப்படும் சிக்கல்களால் இந்த முழங்கால் வலி வருகின்றது. உணவுக் கட்டுப்பாட்டாலும் மூட்டு வலி ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. உணவுக் கட்டுப்பாட்டின்போது மரக்கறி உணவு வகைகளை எடுப்பதாலும், புரத உணவுக் கட்டுப்பாட்டாலும் மூட்டு வலி ஏற்படுகின்றது. இந்த மூட்டு வலி 3 பெண்களுக்கு ஓர் ஆண் என்ற விகிதத்தில்தான் தாக்குகிறது.

இந்த சிகிச்சை முறைக்கு மிகப் பிரதானமாக ஓர் ஆய்வகம் தேவை (cath lab). இந்த ஆய்வகங்கள் கொழும்பில் ஏராளமாக காணப்படுகின்றன. ஏனைய நோய்களுக்காக இதயம், மூளை மற்றும் இரத்த ஓட்டத்தை கண்காணிப்பதற்காக இந்த ஆய்வகத்தை பயன்படுத்துகின்றனர். இவ்வாறான ஆய்வகத்தின் மூலம் நாம் மூட்டு வலிக்கான ஆய்வுகளை மேற்கொண்டு சிகிச்சைக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

கடுமையான முழங்கால் கீழ்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க MIOT வைத்தியசாலை Genicular Artery Embolization (GAE) எனப்படும் ஒரு செயல்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.  குறைந்தபட்ச ஊடுருவல்  சிகிச்சை கொண்ட ஊசித்துளை செயல்முறை முழங்கால் வீக்கத்தை குறைத்து வலி நிவாரணத்தை வழங்குகின்றது.

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழங்கால் மூட்டுக்களின் படிப்படியான தேய்மானம் மற்றும் மூட்டுகுருத்தெலும்பு முற்போக்கான இழப்புக்கு வழிவகுக்கிறது. முழங்கால் மூட்டில் உள்ள எலும்புகளுக்கு இடையில் இருக்கும் திசு மெத்தை முழங்கால் கீழ்வாதம் என்று அழைக்கப்படுகின்றது. முழங்கால் எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராயப்படும்போது கடுமையான வலி, வீக்கம் மற்றும் விறைப்புத்தன்மையை ஏற்படுத்துகின்றது. உட்காருதல், நிற்றல், வளைந்து படிக்கட்டுகளில் ஏறுதல் மற்றும் நடப்பது போன்ற அன்றாட செயற்பாடுகளை பாதிக்கின்றது.

MIOTஇன் ஊடுகதிரியக்கவியல் நிபுணர்களால் வழங்கப்படும் Genicular Artery Embolization (GAE) சிகிச்சை முறையானது திறந்த அறுவை சிகிச்சை இல்லாமல், பொது மயக்க மருந்துகளின்றி, சிகிச்சையின் பின் எவ்வித தழும்புகளும் காணப்படாத விதமாக செய்யப்படுகிறது. இது நோயாளியை வழக்கமாக 2 நாட்களுக்குள் வைத்தியசாலையை விட்டு வெளியேற உதவுகிறது. முழங்கால் கீழ்வாதத்தால் கடுமையான வலியை அனுபவிக்கும் நோயாளிகளுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. விசேடமாக இளம் வயது, ஏனைய Comorbid  நிலைமைகள் அல்லது அறுவை சிகிச்சைக்கு பயம் காரணமாக மொத்த முழங்கால்  மாற்று அறுவை சிகிச்சைக்கு தயார் இல்லாதவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கின்றது.

Genicular Artery Embolization எனும்போது, இடுப்புப் பகுதியை உணர்ச்சி அற்ற நிலைக்கு கொண்டுவர மயக்க மருந்து உட்செலுத்தப்படுகிறது. எமது சர்வதேச கதிர்வீச்சு மருத்துவர்கள் 2 மில்லிமீற்றர் அளவான துளையின் மூலம் நோயாளியின் மேல் தொடையின் தமனியில் ஒரு சிறிய வடிகுழாயைச் உட்செலுத்துவார்கள். MIOTஇன் அதிநவீன Biplane CathLab அமைப்பிலிருந்து X-ray கதிர்களைப் பயன்படுத்துவதன் மூலம் வடிகுழாய் முழங்காலின் புறணிக்கு (Synovium) வழங்கும் தமனிகளுக்கு வழங்குகின்றது. சிறிய துகள்கள் வடிகுழாய் வழியாக இந்த தமனிகளுக்குள் செலுத்தப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட நரம்பு இழைகளுக்கு இரத்த விநியோகத்தைத் தடுக்கிறது. இது கீழ்வாதத்துடன் தொடர்புடைய வீக்கத்தையும் வலியையும் குறைக்கிறது என MIOT வைத்தியசாலையின் முகாமைத்துவப் பணிப்பாளர் வைத்தியர் பிரித்வி மோகன்தாஸ் விளக்கினார்.

MIOT வைத்தியசாலையின் செயற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று அண்மையில் கொழும்பு மரினோ பீச் ஹோட்டலில்  நடைபெற்றது. (படம் : ஜே.சுஜீவகுமார்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14
news-image

யூஸ்டாச்சியன் குழாய் செயலிழப்பு எனும் காதில்...

2025-01-30 14:26:30
news-image

தழும்புகளில் ஏற்படும் வலிக்கான நிவாரண சிகிச்சை

2025-01-29 20:45:31
news-image

செர்வியோஜெனிக் தலைவலி பாதிப்புக்கான சிகிச்சை 

2025-01-27 19:26:02
news-image

மெரால்ஜியா பரேஸ்டெடிகா எனும் தொடை பகுதியில்...

2025-01-25 16:23:10
news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32
news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43
news-image

செபோர்ஹெக் டெர்மடிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2025-01-20 17:51:49
news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52