பொஸ்னியா நாட்டின் மேற்கே சன்ஸ்கி மோஸ்ட் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாளர் ஒருவர் புதன்கிழமை (21) துப்பாக்கி சூடு நடத்தியதில் பாடசாலை அதிபர், செயலாளர் மற்றும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை உயிரிழந்தனர்.
துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் தன்னை தானே சுட்டுக் கொண்டுள்ளார். நெஞ்சில் காயம் பட்ட அவரை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பாடசாலையில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் யாரும் பாடசாலைக்கு வரவில்லை. எனினும், பரீட்சை எழுதுவதற்காக சில மாணவர்கள் வந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸ் திணைக்கள பணிப்பாளர் அமெல் கோஜ்லிகா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மேயர் பரீஸ் ஹசன்பெகோவிச் கூறும்போது, இந்த சம்பவம் நடந்ததற்கான காரணம் பற்றி அறியும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். இதுபற்றி கூறுவதற்கோ அல்லது இதனை நியாயப்படுத்துவதற்கோ எதுவும் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது கூறியுள்ளார்.
அந்த பள்ளியிலுள்ள பணியாளர்கள் சிலர் கூறும்போது, ஒரு தூய்மை பணியாளராக உகாலிக், அவருடைய பணியில் மகிழ்ச்சியற்றவராக காணப்பட்டார் என தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM