இந்தியாவில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் அனகாபள்ளி மாவட்டத்தில் அச்சுதாபுரம் பகுதியில் உள்ள மருந்து தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த மருந்து தொழிற்சாலையில் நேற்று புதன்கிழமை (22) 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துள்ளனர். மதிய உணவு நேரத்தின்போது மருந்து தொழிற்சாலையில் உள்ள ரியாக்டர் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, அருகில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்துள்ளன. இந்த தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இதுபற்றிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்தினரை அவர் இன்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM