(நெவில் அன்தனி)
இங்கிலாந்துக்கு எதிராக மென்ச்செஸ்டர், ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (21) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்க ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் அவர்கள் இருவரும் 8ஆவது விக்கெட்டில் பகிர்ந்த பெறுமதிமிக்க 63 ஓட்டங்களும் இலங்கை அணியை மீட்டெடுத்தன.
மிலன் ரத்நாயக்க 72 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற 9ஆம் இலக்க வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார். அத்துடன் முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில மிலன் பெற்ற அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை எடுத்த தீர்மானம் புத்திசாலித்தனமானது என எண்ணப்பட்டது. ஆனால், ஓட்டங்கள் பெறுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட இலங்கை முதல் 33 பந்துகளில் 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
மொத்த எண்ணிக்கை 6 ஓட்டங்களாக இருந்தபோது மேலதிக ஓட்டம் எதுவும் பெறப்படாமல் திமுத் கருணாரட்ன (2) நிஷான் மதுஷ்க (4), ஏஞ்சலோ மெத்யூஸ் (0) ஆகிய மூவரும் தங்கள் விக்கெட்களை தாரைவார்த்தனர்.
தொடர்ந்து குசல் மெண்டிஸ் (24), தினேஷ் சந்திமால் (17), கமிந்து மெண்டிஸ் (12), ப்ரபாத் ஜயசூரிய (10) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.
அப்போது இலங்கை அணி 7 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதன் காரணமாக இலங்கை 150 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் வலுத்தது.
ஆனால், தனஞ்சய டி சில்வாவும் மிலன் ரத்நாயக்கவும் 8ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டனர்.
84 பந்துகளை எதிர்கொண்ட தனஞ்சய டி சில்வா 8 பவுண்டறிகளுடன் 74 ஓட்டங்களைப் பெற்றார்.
மிகுந்த அனுபவசாலி போல் ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக திறமையாக துடுப்பெடுத்தாடிய மிலன் ரத்நாயக்க கன்னிச் சதம் குவித்து அனைவரினதும் பாராட்டைப் பெற்றார்.
135 பந்துகளை எதிர்கொண்ட மிலன் ரத்நாயக்க 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 72 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை துடுப்பாட்டத்தில் இது இரண்டாவது அதிகூடிய தனிநபர் எண்ணிக்கையாகப் பதிவானது.
தனஞ்சய, மிலன் ஆகியோரை விட குசல் மெண்டிஸ் (24) மூன்றாவது அதிகூடிய எண்ணிக்கையைப் பெற்றார்.
பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷொயெப் பஷிர் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கஸ் அட்கின்சன் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து முதலாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது அதன் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 22 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM