அடுத்த பாராளுமன்றத்தின் முதலாம் ஆண்டில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குங்கள் - சகல வேட்பாளர்களும் பகிரங்கமாக உத்தரவாதம் அளிக்கவேண்டுமென 83 செயற்பாட்டாளர்களும், 8 சிவில் அமைப்புக்களும் கூட்டாக வலியுறுத்தல்!

22 Aug, 2024 | 04:55 PM
image

(நா.தனுஜா)

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் அடுத்த பாராளுமன்றப் பதவிக்காலத்தின் முதலாவது ஆண்டில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக பகிரங்கமாக வாக்குறுதியளிக்கவேண்டும் என மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் 83 பேரும், 8 சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். 

இதுகுறித்து ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரத்னம், கலாநிதி ராதிகா குமாரசுவாமி, அருட்தந்தை நொயெல் டயஸ், சட்டத்தரணி பவானி பொன்சேகா, கலாநிதி மரியோ கோமேஸ், பேராசிரியர் சாவித்ரி குணசேகர, கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவ, பேராசிரியர் ரி.ஜயசிங்கம், கலாநிதி சகுந்தலா கதிர்காமர் உள்ளிட்ட 83 பேரும், ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா, சட்டம் மற்றும் சமூக நிதியம், மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், கிழக்கு சமூக அபிவிருத்தி நிதியம் உள்ளிட்ட 8 அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 

இலங்கையின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு கடந்த 46 வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் ஊடாக நாம் பெற்றுக்கொண்ட அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், நிலைபேறான பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி, சமூகங்களுக்கு இடையிலான ஒருமைப்பாடு, அரசியல் ஸ்திரத்தன்மை என்பன உள்ளடங்கலாக நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான நோக்கங்கள் எவையும் அதனூடாக அடைந்துகொள்ளப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடிகின்றது.  

மாறாக நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையானது நாட்டின் அபிவிருத்தியில் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தியது. இனங்களுக்கு இடையிலான மோதலுக்குத் தூண்டுதலளித்தமை மற்றும் நாட்டின் அரசியல் கட்டமைப்பை நெருக்கடிக்குள் தள்ளியமை ஆகியவற்றின் மூலம் சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையில் இம்முறையை பின்னடைவை ஏற்படுத்தியதே தவிர முன்னேற்றத்தைத் தோற்றுவிக்கவில்லை. 

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையின்கீழ் நிலவும் பொறுப்புக்கூறலின்மை, பதிலளிப்பதற்கான அவசியமின்மை என்பனவும், ஏதேச்சதிகாரப்போக்கு மற்றும் ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்கும் போக்கும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையின் ஊடாக மேற்குறிப்பிட்டவாறான எதிர்மறை விளைவுகள் பதிவாவதற்கு வழிகோலியுள்ளன. ஆகவே இம்முறைமையை இல்லாதொழிப்பதானது இலங்கையில் மீண்டும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு அவசியமான மிகமுக்கிய மறுசீரமைப்பு என்றே நாம் கருதுகின்றோம். 

கடந்த 2022 ஆம் ஆண்டு 'அரகலய' போராட்டத்தின்போது நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமைக்கும், மிகமோசமான ஆட்சியியல் மற்றும் பொருளாதார சீர்குலைவுக்கும் இடையில் நிலவும் பிணைப்பை மக்கள் தெளிவாக வெளிக்கொணர்ந்தார்கள். அத்தன்னெழுச்சிப்போராட்டத்தின்போது அவர்கள் 'கட்டமைப்பு மாற்றத்தை' வலியுறுத்தினார்கள். 

 நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதன் ஊடாக மாத்திரமே அந்தக் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஆரம்பிக்கமுடியும். ஆகவே இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் அடுத்த பாராளுமன்றப் பதவிக்காலத்தின் முதலாவது ஆண்டில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக பகிரங்கமாக வாக்குறுதியளிக்கவேண்டும் என அக்கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04
news-image

4 உணவக உரிமையாளர்களுக்கும் எதிராக ரூபா...

2025-03-26 17:35:26
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கோடாவுடன்...

2025-03-26 17:28:12
news-image

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் -...

2025-03-26 17:15:00
news-image

அஸ்வெசும பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதில்...

2025-03-26 17:25:49
news-image

பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார...

2025-03-26 17:06:23
news-image

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக...

2025-03-26 17:07:14