எம்முடைய இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் சுப பலன்கள் அனைத்தும் கடந்த பிறவியில் நாம் சேகரித்த புண்ணியத்தின் அடிப்படையிலேயே கிடைக்கப்பெறுகின்றன. அதே தருணத்தில் இந்த பிறவியில் சஞ்சித கர்மா- பிராப்த கர்மா - ஆகாம்ய கர்மா என மூன்று வகை கர்மாக்களால் நாம் பீடிக்கப்பட்டிருக்கிறோம்.
அத்துடன் எம்முடைய ஜாதகத்தில் ஆறு, எட்டு, பனிரெண்டு ஆகிய இடங்களில் அசுபர்களின் சேர்க்கை இருந்தாலும் அல்லது கிரகங்களின் சேர்க்கை இருந்தாலும் இந்த இடங்களில் பாதகாதிபதி இருந்தாலும் அல்லது மாந்தி இருந்தாலும் தோஷம் வலிமையாக வேலை செய்யும்.
இவை ஆட்சி செய்யும் போது எமக்கான சுப பலன்களின் வரவு என்பது குறைவாகவே இருக்கும். கெடுப்பலன்களின் எண்ணிக்கை அதிகரித்து நிம்மதியையும், அமைதியையும், முன்னேற்றத்தையும் தடை செய்யும்.
மேலும் இதனுடன் சனி திசை நடந்தாலோ சனி புத்தி நடந்தாலோ அல்லது சனி பகவான் பாதகமான ஸ்தானத்தில் அமர்ந்திருந்தாலோ அல்லது ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி உள்ளிட்ட சனி பகவானின் பிடியில் சிக்கியிருந்தாலோ இவர்கள் தங்களுடைய கெடுப்பலன்களை குறைத்துக் கொள்வதற்கான எளிய பரிகாரத்தை எம்முடைய முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
இவர்கள் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு கரிநாள் என குறிப்பிடப்படும் நாளன்று சென்று காலை அல்லது மாலை வேளைகளில் அந்த ஆலயத்தில் சிவபெருமானை வணங்கி விட்டு, அதனைத் தொடர்ந்து நவ கிரகத்தில் இருக்கும் சனி பகவானுக்கு ரோஜா பூ மாலையை சாற்றி, இரண்டு நெய் தீபங்களை ஏற்றி, 'கெடு பலன்கள் குறைந்து சுப பலன்கள் ஏற்பட வேண்டும்' என மனதார பிரார்த்தித்தால் உங்களுடைய கர்மா தோஷம் குறைவதுடன், மாந்தி தோஷமும் குறையும். சனியின் கெடுப்பலன்களும் குறையும்.
மேலும், மாதந்தோறும் வரும் கரிநாள் அன்று இந்த வலிமைமிக்க பலன்களை வழங்கும் எளிய பரிகாரத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பொழுது ஆறு மாதத்திற்கு பிறகு அல்லது எட்டு மாதத்திற்கு பிறகு சனியினால் ஏற்பட்ட கெடுப்பலன்கள் குறைய தொடங்குவதை அனுபவத்தில் உணரலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM