யாழ்ப்பாணம் வலி.வடக்கு, காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ளது.
இந்த கும்பாபிஷேக நிகழ்வுகளை முன்னிட்டு இன்று (21) காலை 5.30 மணியளவில் விநாயகர் வழிபாட்டோடு கிரியைகள் ஆரம்பமானது.
நாளைய தினம் (22) காலை 8 மணி முதல் விநாயக வழிபாட்டோடு விசேட சாந்தி பூஜைகளை தொடர்ந்து எண்ணெய் சாத்தும் நிகழ்வு மாலை 4 மணி வரை இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து மறுநாள் (23) காலை 5.30 மணி முதல் விநாயகர் வழிபாட்டோடு மஹா கும்பாபிஷேக பூஜைகள் ஆரம்பமாகவுள்ளதால் அடியவர்கள் சமய விழுமியங்களோடு வருகை தந்து, வைரவப்பெருமான் திருவருளை பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, 12 தினங்கள் மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளது.
மேலும், மாங்கொல்லை பிரதேசமானது 33 வருட காலமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து, கடந்த வருட நடுப்பகுதியில் ஆலய சூழலையும், அதனை அண்டிய சில பிரதேசங்களையும் விட்டு இராணுவத்தினர் வெளியேறியிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM