எம்மில் சிலருக்கு திட அல்லது திரவ வகையினதான உணவுகளை விழுங்கிய பிறகு அந்த உணவு தொண்டைக்குள் சிக்கி இருப்பது போன்ற உணர்வு எழும் .வேறு சிலருக்கு அவர்களின் உமிழ்நீர் மீண்டும் தொண்டைக்குள் பாய்வது போல் இருக்கும். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் நீங்கள் அகலாசியா கார்டியா எனும் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கக்கூடும். இதற்கு தற்போது பெரரோல் எண்டாஸ்கோபிக் மயோடோமி எனும் நவீன நுண் துளை சத்திர சிகிச்சை அறிமுகமாகி முழுமையான நிவாரணத்தை வழங்குகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
சிலருக்கு உணவுகளை விழுங்குவதில் சிரமம் இருக்கும். கடுமையானதாக இருந்தால் அதனை டிஸ்ஃபேஜியா என மருத்துவ மொழியில் குறிப்பிட்டு அதற்கான சிகிச்சையை வழங்குவர். ஆனால் சிலருக்கு உணவு விழுங்குவதில் நாட்பட்ட பாதிப்பு இருக்கும். இவர்களுக்கு உணவு தொண்டையில் சிக்கி இருப்பது போன்ற உணர்வு எழும். உமிழ்நீர் தொண்டைக்குள் செல்வது போன்ற உணர்வும் இருக்கும்.
மேலும், இவர்களுக்கு நெஞ்செரிச்சல், ஏப்பம் , விட்டு விட்டு நெஞ்சு வலி, இரவு நேர இருமல், எடை இழப்பு, வாந்தி போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். இவை அனைத்தும் இவர்களுக்கு அகலாசியா கார்டியா எனும் பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
மேலும், இவர்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல் - உணவு குழாயிலிருந்து உணவுத் துகள்கள் வருவதால் ஏற்படுகிறது. அதே தருணத்தில் வேறு சிலருக்கு வயிற்றிலிருந்து உணவுத் துகள்கள் உணவு குழாயிற்குள் வரும். அது வேறு நிலை. இந்த நிலையில் உணவு குழாயில் உள்ள நரம்புகளும், தசைகளும் வலு இழப்பதால் உணவு குழாயின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மேலும் இவர்களுக்கு உணவும், திரவமும் வயிற்றில் இருந்து கொண்டு அழுத்தத்தை ஏற்படுத்துவதால் உணவு உண்பதை அல்லது நீர் அருந்துவதை கடினமாக்குகிறது.
சிலருக்கு சில தருணங்களில் உணவு உணவு குழாயிலேயே தங்கி விடக்கூடும். இத்தகைய பாதிப்பு அரிது என்றாலும் இதனை உணவு விழுங்குதலில் வேறு நிலைப்பாட்டுடன் ஒப்பிடக் கூடாது என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பெரரோல் எண்டோஸ்கோபிக் மயோடோமி எனும் வாய் வழியாக உணவு குழாய்க்குள் எண்டோஸ்கோபிக் எனும் பிரத்யேக குழாயை உள்ளே செலுத்தி சேதமடைந்திருக்கும் உணவு குழாய் தசைகளை சீரமைக்கிறார்கள். இத்தகைய நுண்துளை சத்திர சிகிச்சைக்கு பிறகு அவர்களால் திட உணவுகளையும் திரவ உணவுகளையும் எந்தவித சிரமமும் இன்றி விழுங்க இயலும்.
மேலும், இந்த சிகிச்சைக்குப் பிறகு வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை பின்பற்றினால் இத்தகைய பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
வைத்தியர் முத்துக்குமார்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM