நிறைவேற்றுத்துறை அதிகார ஜனாதிபதி முறைமை நாட்டுக்கு பெரும் சுமை - ரொஷான் ரணசிங்க!

21 Aug, 2024 | 06:40 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) 

நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த நாட்டில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. நாட்டுக்கு சுமையாக உள்ள  நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமையை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும்  அதற்கான சூழல் தோற்றம் பெற்றுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர்  ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (21)  இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் உரையாற்றியதாவது,  

ஊழலற்ற அரச நிர்வாகத்தை  தோற்றுவிப்பதற்காகவே கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரச நிர்வாகத்தை தோற்றுவித்தோம். இருப்பினும் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இவ்வாறான பின்னணியில் தான் 2022 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.  

1972 ஆம் ஆண்டுக்கு  முன்னர் இலங்கையில் இரண்டு தேர்தல்கள் மாத்திரமே காணப்பட்டன.நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தியதன் பின்னர் நான்கு தேர்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சிறிய அரச நிர்வாக அலகினை கொண்ட இந்த நாட்டுக்கு நான்கு தேர்தல்கள் அவசியமற்றது. 

1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க  குமாரதுங்க  நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதாக  குறிப்பிட்டார்.இருப்பினும் வழங்கிய  வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.  அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த எந்த தலைவர்களும் நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. 

2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கம்  நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதாக சோபித தேரருக்கு வாக்குறுதி வழங்கினார்கள்.அதிகார கதிரையை கண்டவுடன் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 

நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இந்த நாட்டில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. அரசியலமைப்பு திருத்தம் மற்றும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யும் தேவை தோற்றம்  பெற்றுள்ளது. 

 அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான வரைவினை முன்னாள் பிரதம நீதியரசர் ஒருவர்  முன்வைத்துள்ளார். நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை இந்த நாட்டுக்கு சுமையானது.ஆகவே  பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறும்  பிரதமர் பதவியை வலுப்படுத்தி விட்டு நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்து செய்ய வேண்டும் என்றார்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வனஇலாகா திருடிய மக்களின் காணிகளை உடனடியாக...

2025-01-16 02:58:27
news-image

புத்தாண்டுக்கும் சிவப்பரிசி இல்லை, பொங்கல் பண்டிகைக்கும்...

2025-01-15 16:41:52
news-image

கனேடிய அரச பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் தொடர்பில்...

2025-01-15 23:14:56
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் யாரும்...

2025-01-15 16:46:15
news-image

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கடமைகளை நிறைவேற்ற பொது...

2025-01-15 21:16:08
news-image

சிகரெட் வரி அதிகரிப்பை புகையிலை உற்பத்தி...

2025-01-15 17:32:01
news-image

சிறிய, நடுத்தரளவு வணிகங்களை மேம்படுத்துவதற்கான அமுலாக்க...

2025-01-15 20:04:14
news-image

இலங்கை - இந்திய உறவுகளை மேலும்...

2025-01-15 17:43:18
news-image

காலநிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் அறுவடையில்...

2025-01-15 19:33:00
news-image

சீன - இலங்கை ஜனாதிபதிகள் இடையே...

2025-01-15 18:41:28
news-image

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை...

2025-01-15 18:06:13
news-image

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார உட்பட...

2025-01-15 18:08:20