புதிய போஸ்டர்களை வெளியிடும் 'விடாமுயற்சி' படக்குழு

Published By: Digital Desk 7

21 Aug, 2024 | 06:40 PM
image

அஜித் குமார் நடிப்பில் தயாராகி வரும் விடா முயற்சி படத்தில் நடிக்கும் நடிகர்கள் கணேஷ் சரவணன் மற்றும் தாசரதி ஆகியோர்களின் கதாபாத்திர தோற்ற புகைப்படத்தை படக் குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநரும், நடிகரும், பின்னணி குரல் கலைஞரான மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடா முயற்சி' எனும் திரைப்படத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ், நிகில் நாயர், கணேஷ் சரவணன், தாசரதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதமிருக்கும் நிலையில் இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் கதாபாத்திரத்தை.. தோற்றப் புகைப்படங்களாக படக்குழுவினர் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் இந்தத் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் கணேஷ் சரவணன் மற்றும் தாசரதி ஆகியோர்களின் கதாபாத்திர தோற்ற புகைப்படத்தை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  வழக்கம் போல் அஜித் குமாரின் பின்னணியில் இந்த இரண்டு நடிகர்களின் தோற்றமும் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

இதனிடையே 'விடாமுயற்சி' பற்றிய அப்டேட் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருவதன் காரணம் குறித்து விசாரிக்கும் போது விரைவில் தளபதி விஜயின் 'கோட்' திரைப்படம் வெளியாக இருப்பதால்  'தல' அஜித்தின் படத்தைப் பற்றிய அப்டேட்டுகளை படக் குழுவினர் வெளியிட்டு வருகிறார்கள் என திரையுலக வணிகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் என்பதும், இந்தப் படத்தை தயாரித்து வரும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தின் வெளியீட்டு திகதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டு. அதனை ரசிகர்களிடம் பிரபலப்படுத்துவதற்காக எந்த விளம்பரங்களையும் முன்னெடுக்காமல் தொடர்ச்சியாக அஜித்குமாரின் விடாமுயற்சி படத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கி வருவதன் பின்னணி விரைவில் தெரியவரும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46
news-image

ஸ்வீட் ஹார்ட் - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:57:00
news-image

பெருசு - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:47:48
news-image

ராபர் - திரை விமர்சனம்

2025-03-14 18:26:12
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-14 17:41:17
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த 'எமகாதகி'...

2025-03-13 18:32:12
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ட்ராமா'...

2025-03-13 18:31:45
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'சக்தி திருமகன்'...

2025-03-13 18:25:30
news-image

நடிகை சௌந்தர்யா மரணத்தில் மோகன்பாபுவுக்கு தொடர்பா?...

2025-03-13 10:29:57