யுத்தத்தின் பின்னராக இலங்கையில் மோதலைத் தூண்டும் முக்கிய காரணியாக காணிகள் - மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்

21 Aug, 2024 | 06:40 PM
image

(நா.தனுஜா)

யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னரான இலங்கையில் மோதலுக்குத் தூண்டுதலளிக்கும் மிகமுக்கிய காரணியாகக் காணிப்பிரச்சினை காணப்படுவதாகவும், இதற்கு உடனடியாகத் தீர்வுகாணத்தவறும் பட்சத்தில் இனங்களுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைவதுடன், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் பாரிய பின்னடைவு ஏற்படும் என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் எச்சரித்துள்ளது.    

நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துவரும் நில அபகரிப்புக்கள் மற்றும் அவை அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள் பற்றி விரிவான விளக்கத்தையும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய பரிந்துரைகளையும் உள்ளடக்கி மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் 'இலங்கையில் காணிப்பிரச்சினையின் குறுக்குவெட்டு (ஒன்றுக்கொன்று தொடர்புடைய) போக்கு' எனும் தலைப்பில் 95 பக்க அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. 

'இலங்கையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்களின் பின்னரும் இனங்களுக்கு இடையிலான பிளவுகள் தொடர்வதுடன், யுத்தத்துக்கான அடிப்படைக்காரணிகள் இன்னமும் களையப்படவில்லை. அதன் ஓரங்கமாக பல தசாப்தகால காணிப்பிரச்சினை யுத்தத்தின் பின்னரும் தொடரும் அதேவேளை, இவ்விடயத்தில் பல்வேறு வழிமுறைகளில் நிகழும் அரச தலையீடுகள் நல்லிணக்க செயன்முறையில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடியவாறான பிளவுகளைத் தோற்றுவித்துள்ளன.

கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வட, கிழக்கு மாகாணங்களில் அதிகாரங்களில் சமத்துவமற்ற நிலையைத் தோற்றுவிப்பதற்கு காணிகள் பயன்படுத்தப்பட்டுவந்திருப்பதுடன், தற்போது இப்பகுதிகளில் மேலோங்கிவரும் 'ஊடுருவல் போக்கு' அப்பகுதி மக்களிடையே அச்சத்தை விதைத்திருக்கிறது' என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதேவேளை அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் பதிவாகி, தற்போதும் தொடர்ந்துவரும் காணிப்பிரச்சினைகள் குறித்து தனித்தனியாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,   இவ்வறிக்கையில் விபரிக்கப்பட்டிருக்கும் காணிப்பிரச்சினைகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், அதன் பின்னணியில் பரந்துபட்ட அளவிலான சட்ட மற்றும் கொள்கைசார் கரிசனைகள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், ஆட்சியியல் நிர்வாக மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளல், மோதலுக்குத் தூண்டுதலளிக்கும் காரணிகளைக் களைதல், அவசியமான சட்ட மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல், காணி அபகரிப்புக்களால் எதிர்மறையான பாதிப்புக்களுக்கு உள்ளானோருக்கு உரியவாறான இழப்பீட்டை வழங்கல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துபாயில் ஒளிந்துகொண்டு இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில்...

2025-11-07 03:19:52
news-image

யாழில் சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்த...

2025-11-07 02:53:26
news-image

வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலகம் மாங்குளத்தில்...

2025-11-07 02:51:14
news-image

இந்த ஆண்டு இதுவரை 2210 வீதி...

2025-11-07 02:35:23
news-image

யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

2025-11-07 01:58:41
news-image

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன்...

2025-11-07 01:55:53
news-image

விசேட மூலோபாய உறவுக்கு முக்கியத்துவமளிப்பதே இலங்கையின்...

2025-11-06 15:10:08
news-image

இந்து சமுத்திரத்தின் அமைதியைப் பாதுகாப்பதற்கு இலங்கை...

2025-11-06 12:15:26
news-image

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவின்...

2025-11-06 22:17:21
news-image

கண்டி அருப்போலாவில் அமெரிக்கப் பெண் மரணம்...

2025-11-06 22:14:04
news-image

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவின் வகிபாகம்...

2025-11-06 15:40:08
news-image

2035க்குள் தொழுநோயை முழுமையாக ஒழிக்க அரசாங்கம்...

2025-11-06 21:16:38