வத்தளை பிரதேசத்தில் உள்ள செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் நிலையமொன்றில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட நான்கு வெளிநாட்டு மலைப்பாம்புகளுடன் மூன்று சந்தேக நபர்கள் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் நிலையத்தின் உரிமையாளரும் இரண்டு பணியாளர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்த இரண்டு ஆண் மலைப்பாம்புகளும் இரண்டு பெண் மலைப்பாம்புகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பல இலட்சம் ரூபா பெறுமதியான இந்த மலைப்பாம்புகள் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டு வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதனையடுத்து, இந்த மலைப்பாம்புகள் அனைத்தும் தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வத்தளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM