ஊழலை ஒழித்து பொருளாதார சுதந்திரத்தை உருவாக்கும் பணியில் இணைந்து கொள்ளுங்கள் - சஜித் பிரேமதாச

Published By: Vishnu

21 Aug, 2024 | 02:32 AM
image

பொருளாதாரப் பேரழிவின் விளிம்பில் சிக்கி இருக்கின்ற  நாட்டை மீட்டெடுப்பதற்கு முடியுமான ஞானமும் திறமையும் உள்ள சிறந்த குழு என்னிடம் இருக்கின்றது.

மனிதாபிமான  முதலாளித்துவத்தையும், சமூக  ஜனநாயகத்தையும் ஒன்றோடு ஒன்று இணைத்து ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதார மேம்பாட்டின் ஊடாக நமது நாட்டை செழிப்பான நாடாகவும், துரித பொருளாதார  அபிவிருத்தியுடைய நாடாகவும் மாற்றி, அதன் பிரதிபலனின்  சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் பகிர்ந்தளிக்கும்   பொருளாதார கட்டமைப்பிற்கு  இந்தக் குழுவோடு செல்ல முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

இந்த புதிய சிந்தனை சமமான வழிமுறையை பின்பற்றி  நீதியையும் நியாயத்தையும்  நிலைநாட்டுகின்ற புதிய பாதைக்கு இட்டுச் செல்லும்.  இதில் ஊழல் மோசடிக்கு எந்த ஒரு இடமும் இல்லை. 

கொள்முதல் முறைகளையும்  மோசடியான அரச கொடுக்கல் வாங்கல் முறைகளையும்  தவிர்த்து, ஊழலை அடியோடு இல்லாத செய்யும்  பொருளாதார சுதந்திரத்தை  வெற்றி கொள்ளும் பணியில்  இணைந்து கொள்ளுமாறு  அழைப்பு விடுக்கிறேன்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

எமது நாட்டின் எதிர்கால பொருளாதார வழிமுறைகள் பற்றிய சிநேகபூர்வ  கலந்துரையாடல் மற்றும்    கருத்தாடல்களில் ஈடுபட்ட  எமது நாட்டின் வர்த்தகர்கள்  மற்றும் வணிகத்துறையினருக்கு  நன்றி தெரிவிக்கிறேன் என அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

தேசிய தொழில் வல்லுநர்கள் பேரவை (NCP) இன்று(20) கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் அபிவிருத்தி வாய்ப்புகளைப் புரிந்து கொள்ளும் பொருட்டான இலங்கையின் பொருளாதார மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் எதிர்காலவாதிகளின் கருத்தாய்வு மாநாட்டில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். இம்மாநாட்டில் பிரதம அதிதி உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கருத்தாய்வு மாநாட்டில் கலாநிதி மான்டேக் சிங்  (Economic architect of india's liberalization policy), 

டி.கிருஷ்ணகுமார் (CEO of reliance consumer product limited), வெரிட்டி ஆய்வகத்தின் பணிப்பாளர் கலாநிதி நிஷான் டி மெல், எரான் விக்கிரமரத்ன, சுஜீவ சேனசிங்க, ஹர்ஷன ராஜகருணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துரைகளையும் நோக்குகளையும் முன்வைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28
news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14