கடைசி மகளிர் ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி; ஆனால் தொடர் அயர்லாந்து வசம்

Published By: Vishnu

20 Aug, 2024 | 11:50 PM
image

(நெவில் அன்தனி)

பெல்ஃபாஸ்ட், ஸ்டோமன்ட் சிவில் சேவைகள் கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவதும் கடைசியுமான மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் இலங்கை வெற்றியீட்டியது.

3 போட்டிகள் கொண்ட தொடரை ஏற்கனவே பறிகொடுத்த இலங்கைக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற அயர்லாந்து தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது.

அணித் தலைவி சமரி அத்தபத்துவின் சகலதுறை ஆட்டம், ஹர்ஷித்தா சமரவிக்ரமவின் திறமையான துடுப்பாட்டம் என்பன இலங்கையின் இலகுவான வெற்றிக்கு வழிசமைத்தன.

அப் போட்டியில் அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 123 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 23.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.

சமரி அத்தபத்து 48 ஓட்டங்களையும் ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆட்டம் இழக்காமல் 48 ஓட்டங்களையும் பெற்றனர். கவிஷா டில்ஹாரி 10 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 46.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

மத்திய வரிசையில் ஆலின் கெலி (35), லீ போல் (19) பின்வரிசையில் அலிஸ் டெக்டர் (17), ஃப்ரியா சாஜன்ட் (16), எய்மி மெகயர் (10 ஆ. இ.) ஆகியோர் துடுப்பாட்டத்தில் சிறந்த பங்களிப்பு வழங்கினர்.

பந்துவீச்சில் சமரி அத்தபத்து 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அச்சினி குலசூரிய 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சச்சினி நிசன்சலா 35  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: சமரி அத்தபத்து, தொடர்நாயகி: ஆலின் கெலி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பின் அலனின் அசத்தலான சதத்தின் உதவியுடன்...

2026-05-09 11:00:14
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-08 19:57:44
news-image

கொழும்பு அணியை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டு...

2026-05-08 13:37:57
news-image

இன்று ஆரம்பமானது டிஎஸ்எஸ் - மஹாநாம...

2026-05-08 13:44:11
news-image

மிச்செல் மார்ஷ் சதம் குவித்து அசத்தல்;...

2026-05-08 13:06:29
news-image

நாட்டை வந்தடைந்தது நியூசிலாந்து மகளிர் "ஏ"...

2026-05-08 09:45:26
news-image

கூப்பர் கொனலியின் சதம் வீண்போனது; பஞ்சாபை...

2026-05-07 11:34:54
news-image

பரபரப்பான முடிவை நோக்கி தம்புள்ளை -...

2026-05-07 09:18:58
news-image

சம அளவில் மோதப்படும் தேசிய சுப்பர்...

2026-05-06 09:33:01
news-image

சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றிக்கு சஞ்சு...

2026-05-06 09:27:53
news-image

லங்கா பிறீமியர் லீக் (LPL) 2026க்கான...

2026-05-05 23:06:59
news-image

ஜேர்மனில் கராத்தே சுற்றுப்போட்டி 

2026-05-01 20:19:51