(நெவில் அன்தனி)
ரி20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பங்களதேஷில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஜூலை மாதத்திலும் ஆகஸ்ட் மாத முற்பகுதியிலும் இடம்பெற்றதை அடுத்து சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) போட்டி நடைபெறும் இடத்தை மாற்றியுள்ளது.
அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து பிரதமர் ஷெய்க் ஹசினா இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு சென்று விட்டார்.
அதன் பின்னர் இராணுவத்தினால் இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்டது.
ஆனால், பரவலாக பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதாகவும் கொள்ளையிடப்பட்டதாகவும் வன்முறைகள் இடம்பெற்றதாக பங்களாதேஷிலிருந்து செய்திகள் வெளியாகின.
ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு பங்களாதேஷின் இடைக்கால அரசு கடைசி முயற்சியில் ஈடுபட்டது.
ஆனால், தங்களது நாட்டு பிரஜைகள் பங்களாதேஷுக்கு பயணிக்கக்கூடாது என அவுஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து) ஆகிய நாடுகள் உட்பட மற்றும் சில நாடுகள் பயண ஆலோசனைகள் விடுத்ததால் ஐசிசி இந்த முடிவுக்கு வந்துள்ளது.
'மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை பங்களாதேஷ் நடத்தாதது வெட்கத்துக்குரியதாகும். ஏனேனில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மிகச்சிறப்பாக இந்தப் போட்டியை நடத்தும் என்பதை நாங்கள் அறிவோம்' என ஐசிசி பிரதம நிறைவேற்ற அதிகாரி ஜெவ் ஆல்ரிஜ் தெரிவித்தார்.
'பங்களாதேஷில் போட்டியை நடத்துவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை எடுத்துக்கொண்ட சகல முயற்சிகளுக்காகவும் நன்றி கூறுகிறேன். ஆனால் சில நாடுகள் பயண ஆலோசனைகளை விடுத்ததால் அது சாத்தியப்படவில்லை. எனினும் போட்டிகளை முன்னின்று நடத்தும் பொறுப்பு பங்களாதேஷுக்கே உரித்தாகும். பங்களாதேஷில் விரைவில் ஒரு ஐசிசி உலக கிரிக்கெட் போட்டியை நடத்த எண்ணியுள்ளோம்.
'பங்களாதேஷ் சார்பாக போட்டியை நடத்த முன்வந்த எமிரேட்ஸ் கிரிக்கெட் சபைக்கும் ஆதரவு வழங்க முன்வந்த இலங்கைக்கும் ஸிம்பாப்வேக்கும் நன்றி கூற விரும்புகிறேன். இந்த இரண்டு நாடுகளில் 2026இல் ஐசிசி உலக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதை பார்க்க விரும்புகிறோம்' என ஆல்ரிஜ் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM