நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு லக்னத்திலும் ஏதேனும் ஒரு நட்சத்திரத்திலும் அந்த நட்சத்திரத்தின் நான்கு பாதங்களில் ஏதேனும் ஒரு பாதத்திலும் பிறக்கிறோம். இவை அனைத்தும் கடந்த பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் தான் இந்த பிறப்பு அமைகிறது.
இதனை உறுதியாக நம்பும் நாம் இந்த பிறவியில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதனை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கு மாறாக நமக்குள் நாமே ஒரு விருப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு, சில ஆசைகளையும், லட்சியங்களையும் உருவாக்கிக் கொண்டு, வாழ்க்கையை இப்படித் தான் திட்டமிட்டு வாழ வேண்டும் என்று ஒரு பாதையை அமைத்துக் கொண்டு வாழ தொடங்குகிறோம்.
ஆனால் வாழ்க்கை நாம் நினைத்தபடி செல்வதில்லை. விதிப்படிதான் நடைபெறுகிறது. இதனை முழுதாக உணர்ந்து கொள்வதற்குள் ஒவ்வொருவருக்கும் அவரவர் அனுபவத்தின் படி இளமையை கடந்து விடுகிறார்கள். மேலும் சிலர் இதைப்பற்றிய எந்த கவனத்தையும் தம்முள் ஏற்படுத்திக் கொள்ளாமல் வசதி, சௌகரியம் என்ற விடயத்திற்கு முன்னுரிமை கொடுத்து வாழ பழகிக் கொள்கிறார்கள்.
இதனால் அவர்களுக்கு தோஷம் ஏற்படுகிறது. அவர்கள் ஒரு குடும்பத்தை அமைக்கும்போதும் அல்லது ஒரு குடும்பத்தில் இருக்கும் போதும் அது குடும்ப தோஷமாக உருமாறுகிறது. ஒரு வீட்டில் வருவாய் ஈட்டும் குடும்ப தலைவருக்கு தோஷம் ஏற்பட்டால் அதுவும் குடும்ப தோஷம் தான் அல்லது உங்களுடைய குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களுடைய ஜாதகத்தில் ஆறு, எட்டு, பனிரெண்டு ஆகிய இடங்களில் அசுபர்களின் சேர்க்கை ஏற்பட்டாலோ அல்லது ஆறு, எட்டு, பனிரண்டு ஆகிய இடங்களில் உங்களுடைய பாதகாதிபதி இடம் பிடித்திருந்தாலோ அல்லது ஆறு, எட்டு, பனிரெண்டு ஆகிய இடங்களில் மாந்தி இருந்தாலோ குடும்ப தோஷம் பற்றிக் கொள்கிறது.
குடும்ப தோஷம் இருந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது. அதையும் கடந்து மகிழ்ச்சி உண்டானால் அவை தற்காலிகமாகத் தான் இருக்கும். இந்த தோஷம் குடும்பத்தினரை முன்னேற விடாமல் இடையூறை ஏற்படுத்தும். உங்களைப் பற்றிய அவதூறுகளை தொடர்ச்சியாக பரவச் செய்து, உங்களையும், உங்களது குடும்ப உறுப்பினர்களையும் சங்கடத்திற்குள் ஆழ்த்தும்.
இந்த நிலையில் குடும்ப தோஷத்தை நீக்குவதற்காக எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில எளிய பரிகாரங்களையும் முன்மொழிந்து இருக்கிறார்கள். இவற்றில் முதன்மையானது சிவசுப்பிரமணிய ஹோமம்.
உங்களது வீட்டுக்கு அருகே உள்ள ஆலயத்தில் இருக்கும் இறைத்தொண்டு செய்யும் சிவாச்சாரியாரிடம் சிவசுப்பிரமணிய ஹோமத்தை நடத்தித் தருவீர்களா? என பணிவுடன் கேட்க வேண்டும். அவர்களுக்கு சிவசுப்பிரமணிய ஹோமத்தை நடத்துவதில் அனுபவம் இருக்கிறது என்று சொன்னால் அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து அந்த ஹோமத்தை மேற்கொள்ள வேண்டும்.
இந்த ஹோமத்தை நீங்கள் உங்களுடைய குடும்ப உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு செய்யலாகாது. உங்களுடைய பங்காளிகள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் அவசியம் இதில் பங்குபற்ற அழைப்பு விடுக்க வேண்டும். இந்த ஹோமத்தில் இடம்பெறும் புனித கலசத்தில் இடம்பெறும் புனித நீரை யாகம் நிறைவடையும் போது சிவாச்சாரியார், பங்காளிகள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நீராட வேண்டும்.
அதன் பிறகு வருகை தந்திருக்கும் அனைத்து பங்காளிகளுக்கும், உறவினர்களுக்கும் அவர்களின் மனமுவந்த ஆசியை பெறுவதற்காக அவர்களுக்கு வஸ்திர தானமும், அன்னதானமும் செய்ய வேண்டும். இதனை நீங்கள் அந்த சிவாச்சாரியார் குறித்து தரும் சுப நாட்களில் மேற்கொண்டால் உங்களை பிடித்துக்கொண்டு, முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தும் குடும்ப தோஷம் நீங்கும். அதன் பிறகு உங்களின் குடும்பம் வளர்ச்சி அடைவதையும், தொடர்ச்சியாக நற்பெயரை சம்பாதிப்பதையும் அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM