யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.போதியளவான முன்பதிவு இல்லாமை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கப்பல் போக்குவரத்து தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை காணப்படும் எனவும் நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பயணிகள் வருகை அதிகரிப்பின் அடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் நாளாந்தம் இந்த கப்பல் சேவையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்களில் மாத்திரமே நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை முன்னெடுக்கப்படும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM