காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றுடன் 43நாட்களாக தொடர்கின்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கடந்த மாதம் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போரட்டம் இன்று வரையில் எந்தவித சாதகமான பதில்களும் அற்றநிலையில் தொடர்ந்து செல்கின்றது.

இந்தநிலையில் தமது உறவுகள் தொடர்பில் எந்தவித பதில்களும் அற்றநிலையில் இன்றுடன் 43 நாட்களாக விடையேதும் இன்றி தமது போராட்டம் தொடர்ந்து செல்வதாக காணாமல் ஆக்கப்பட்டொரின் உறவுகளை கவலை தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை இன்றையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்;னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.