பின்னவல பகுதியில் பக்கவாதம் ஏற்பட்டுள்ள தனது தந்தைக்கு உதவி கொண்டிருந்த திருமணமாக பெண்ணொருவர் நான்கு பேர் அடங்கிய குழுவொன்றால் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பாதிப்படைந்த 45 வயதான குறித்த பெண் நேற்று பலங்கொடை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர்களில் ஒருவர் பின்னவல பொலிஸார் கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைக்கு அமைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.