ஷிம்லாவில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 44 பேர் பலியாகினர்.

ஷிம்லாவில் இருந்து தியூனி என்ற இடத்துக்கு தனியார் பேருந்து ஒன்று பயணித்துக்கொண்டிருந்தது. இதில், சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 56 பேர் பயணித்தனர்.

மலைப்பாங்கான நெர்வா பகுதியருகே சென்றுகொண்டிருந்தபோது, பேருந்து ஒரு பக்கமாகச் சரிந்து உருண்டு, தோன் ஆற்றில் விழுந்தது. விபத்து பற்றித் தெரியவந்த மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 44 பேரின் சடலங்கள் கிடைத்துள்ளன. எஞ்சிய 12 பேரும் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.