இத்தாலியில், சிசிலி தீவுகளுக்கு அருகே சொகுசு படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேரை காணவில்லை.
பிரித்தானியக் கொடியுடன் பயணித்த 56 மீற்றர் நீளமான கப்பலில் 22 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட சூறாவளியே இந்த விபத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கப்பலில் பயணித்தவர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பிரித்தானிய, அமெரிக்க மற்றும் கனேடிய பிரஜைகள் அடங்கிய குழுவொன்று சொகுசு படகில் பயணித்துள்ளதுடன், விபத்தில் உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
காணாமல் போன 06 பேரை தேடும் பணியை கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM