நுவரெலியாவில் அடையாளம் தெரியாமல் காணப்பட்ட பெண் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சடலம் திங்கட்கிழமை மாலை (19) நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகாமையில் உள்ள வீதியோரத்தில் விழுந்து கிடந்ததை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருத்துவ உதவி அதிகாரிகள் குறித்த பெண் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு வீதியோரத்தில் கிடக்கும் பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM