எம்மில் பலருக்கும் அவர்களுடைய ஜாதகத்தின் படி நல்ல திசா புத்தி நடைபெறும். கிரகங்களும் சாதகமாக இருக்கும். கோட்சாரத்திலும் சுப பலன்களை அளிக்கும்.
ஆனால் இவர்களால் பலன்களை அனுபவிக்கவோ அல்லது வாழ்வில் முன்னேறவோ முடியாது. இதற்கான காரணத்தை தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பர். இதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள்,' இவர்களுக்கு மனை தோஷ பாதிப்பு ஏற்பட்டிருக்கும்' என குறிப்பிடுகிறார்கள்.
உடனே எம்மில் சிலர் அது என்ன மனை தோஷம்..? என வினா எழுப்புவர். நீங்கள் சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது வாடகை வீட்டில் இருந்தாலும்.. நீங்கள் இருக்கும் இடத்தில் வசிக்கும் இடத்தில் உள்ள பூமி அதாவது மனை, தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அதனுடைய எதிரொலி உங்களுடைய வாழ்விலும் ஏற்படும்.
இதனை எப்படி உணர்ந்து கொள்வது ?என சிலர் கேட்பார். உங்களுக்கு தொடர்ச்சியாக துர் கனவு அதாவது கெட்ட கனவு வந்தாலோ உங்களது உழைப்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உழைப்பின் காரணமாக ஈட்டும் வருவாய் அதிகம் இருந்தாலும் முன்னேற்றம் என்பது இல்லை என்றாலோ வாகனங்களால் தொடர் செலவு ஏற்பட்டாலோ ஆண் பிள்ளை அல்லது பெண் பிள்ளை அகாலத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது எதிர்பாராத வகையில் தொடர்ந்து மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலோ அல்லது எதிர்பாராத வகையில் சிறிய அளவிலேனும் விபத்துகள் ஏற்பட்டாலோ மனதை சமநிலைப்படுத்தி இயல்பாக வைத்துக் கொள்ள முடியாமல், மன அழுத்தம் , மன உளைச்சல் போன்றவை ஏற்பட்டாலோ வெளியில் இருக்கும் போது அதாவது ஆலயம், தியான கூடம் போன்றவற்றில் இருக்கும் போது கிடைக்கும் சிறிய அளவிலான மன நிம்மதி வீட்டிற்கு திரும்பியவுடன் கிடைக்கவில்லை என்றாலோ உங்களுடைய அதாவது நீங்கள் வசிக்கும் வீட்டின் மனை அதாவது வீடு, தோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது என பொருள் கொள்ள வேண்டும்.
இதனை அகற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதுதான் உங்களின் அடுத்த வினாவாக இருக்கும்.
இதற்கு முதன்மையான நிவாரணம் அல்லது பரிகாரம் என்பது மிருத்யுஞ்சய ஹோமம் செய்வதுதான்.
இந்த யாகம் செய்வது கூடுதல் தொகை என கருதினால், அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று அங்குள்ள யானை இடமிருந்து கோமியத்தை சேகரித்து, அதனை வீட்டிற்கு எடுத்து வந்து வீடு முழுவதும் தெளித்தால் மனை தோஷம் அகலும். அதனுடன் பாதகாதிபதியால் ஏற்படும் தோஷமும் விலகும்.
உடனே எம்மில் சிலர் எங்களுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆலயத்தில் யானை இல்லை. நாங்கள் என்ன செய்வது? என கேட்பர்.
நாட்டு மருந்து கடைகளில் குண்டுமணி மற்றும் சாம்பிராணி ஆகிய இரண்டையும் வாங்கி வந்து, அதனை தூளாக உடைத்து மாலை வேலைகளில் வீடு முழுவதும் தூப தீபத்தை காட்ட வேண்டும். இதனை தொடர்ச்சியாக ஒரு வாரம் மேற்கொண்டால் மனை தோஷம் நீங்கும்.
இந்த எளிய பரிகாரத்தை மேற்கொண்டு மனை தோஷத்தை அகற்றி, உங்களது உழைப்பு உங்களின் முன்னேற்றத்திற்காக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM