எம்முடைய உடலில் ரத்த ஓட்டம் சீராக இயங்குவதற்கு ரத்த நாளங்களின் ஆரோக்கியம் முதன்மையானது. எம்மில் பலருக்கும் காலில் வீக்கம், கால் வலி, காலில் புண் போன்ற பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு தற்போது அறிமுகமாகி இருக்கும் வெய்ன் மேப்பிங் எனும் நவீன அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை பலனளிக்கிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதயத்தின் ஆரோக்கியத்திற்கும், கால்களின் ஆரோக்கியத்திற்கும் அப்பகுதிகளில் பயணிக்கும் நரம்புகள் அல்லது ரத்த நாளங்களின் வலிமையும், ஆரோக்கியமும் முக்கியமானதாக இருக்கிறது.
முதுமையின் காரணமாகவோ அல்லது போதிய உடற்பயிற்சியின்மை காரணமாகவோ அல்லது சர்க்கரை நோய் உள்ளிட்ட வளர்ச்சிதை மாற்ற நோய் பாதிப்பின் காரணமாகவோ கால்களில் வீக்கம் , புண், வலி போன்ற பாதிப்பு ஏற்படுவது அதிகரித்திருக்கிறது. இதன் போது நோயாளிகளின் ரத்தநாள பாதிப்புகளை அவதானிப்பார்கள்.
இந்நிலையில் ரத்தநாளங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்க அவர்களுக்கு வெய்ன் மேப்பிங் எனும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
அல்ட்ரா சவுண்ட் பாணியிலான இந்த நவீன பரிசோதனை மூலம் ரத்த நாளங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, அதன் பலவீனம், தன்மை, ஆகியவை துல்லியமாக அவதானிக்கப்படுகிறது.
அதன் பிறகு நோயாளிகளுக்கு கம்ப்ரஷன் தெரபி எனும் நவீன சிகிச்சையை வழங்கி, முழுமையான நிவாரணம் அளிக்கப்படுகிறது.
வெகு சிலருக்கு இத்தகைய பரிசோதனைக்கு பின்னர், அவர்களுக்கு வேறு சில பரிசோதனைகளையும் மேற்கொண்ட பின், சாவி துவார சத்திர சிகிச்சை உள்ளிட்ட பல நவீன சத்திர சிகிச்சைகளையும் செய்து முழுமையான நிவாரணத்தை வழங்குகிறார்கள்.
வைத்தியர் சாய்ராம்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM