சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 7

19 Aug, 2024 | 05:55 PM
image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி இருக்கும் 'வேட்டையன்' திரைப்படம் வெளியாகும் திகதியை படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.

'ஜெய் பீம்' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வேட்டையன்' எனும் திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பொலிவுட் சுப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், பஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், அபிராமி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரெடின் கிங்ஸ்லி, ரோஹினி, ராவ் ரமேஷ், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எஸ் . ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபல பிரம்மாண்டமான தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.

தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

மேலும், இப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் அனைத்து தரப்பினருக்கும் லாபத்தை அளித்து இந்திய மதிப்பில் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்த திரைப்படம் ஒரே திரைப்படம் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்'.  இந்தப் படத்தை தொடர்ந்து வெளியாகும் 'வேட்டையன்' திரைப்படமும், 600 கோடி ரூபாய் அளவிற்கு வசூலிக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள்

இதனிடையே சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் 'கங்குவா' எனும் திரைப்படமும் ஒக்டோபர் பத்தாம்  திகதியன்று வெளியாகிறது என்பதும், ஒக்டோபரில் சூர்யா மற்றும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்கள் நேரடியாக மோதுவதால் ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'கொம்பு...

2025-12-16 16:04:10
news-image

அருண் விஜய் நடிக்கும் 'ரெட்ட தல'...

2025-12-16 15:57:42
news-image

கொமடி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் கிச்சா...

2025-12-16 15:55:31
news-image

நடிகர் பொபி சிம்ஹா நடிக்கும் புதிய...

2025-12-16 15:53:20
news-image

ஆங்கில புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் டொக்டர்...

2025-12-16 15:50:50
news-image

கவனம் ஈர்க்கும் 'ஹாட் ஸ்பாட் 2...

2025-12-16 15:45:39
news-image

முகநூல் காதலின் விபரீதத்தை விவரிக்கும் 'ரகசிய...

2025-12-15 16:01:04
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும்' பராசக்தி ' படத்தின்...

2025-12-15 15:42:35
news-image

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் பெயரிடப்படாத...

2025-12-15 15:33:35
news-image

இந்திய மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தொடங்கி...

2025-12-15 15:25:37
news-image

மகா சேனா - திரைப்பட விமர்சனம்

2025-12-13 15:47:09
news-image

டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாகும் பார்வதி...

2025-12-13 15:16:44