(எம்.ஆர்.எம்.வசீம்)
ஐக்கிய தேசிய கட்சியின் அனுராதபுரம் மாவட்ட அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதுடன் களுத்துறை மாவட்ட அமைப்பாளராக நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதுதொடர்பான நியமனக்கடிம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) கையளிக்கப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சியின் பிராந்திய அமைப்பாளர்களுக்கு நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் நேற்று கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது.
இதன்போதே அவருக்கு இந்த இந்த நியமனக்கடிதத்தை ஜனாதிபதி கையளித்தார். இதற்கு மேலதிகமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பீ.ஹரிசன்,டபிள்யூ. பி.ஏக்கநாயக்க ஆகியோரும் அனுராதபுரம் மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு நியமனக்கடிதம் கையளிக்கப்பட்டது.
அத்துடன் காலி மாவட்ட அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம, அம்பாந்தோட்டை மாவட்ட அமைப்பாளர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பீ.திஸ்ஸ குட்டி ஆரச்சி மற்றும் பீ.தேவக்க வீரசிங்க ஆகியோருக்கும் ஜனாதிபதியினால் நியமனக்கடிதம் கையளிக்கப்பட்டது.
அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் பிராந்திய அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதம், கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன.கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, கொழும்பு மாவட்ட தலைவர் ரவி கருணாநாயக்க, முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் மற்றும் வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. இதன்போது 295 அமைப்பாளர்களுக்கு நியமனக்கடிதம் கையளிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM