மட்டகளப்பு மாவட்ட தனியார் புகையிரத கடவை ஊழியர்கள் இன்று புதன் கிழமை காலை 8 மணியளவில் மட் ட க்களப்பு புகையிரத நிலையத்துக்கு முன்னாள்  ஆர்ப்பாட்டத்தில் குத்தித்துள்ளனர்.

தங்களது ஊதியம் மற்றும்  8 மணி நேரம் வேலை செய்தல் 250 ரூபா சம்பளம் தருவதாகவும் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்றே இந்த  ஆர்ப்பாட்டத்தில்   தாம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் உயர் அதிகாரிக்கு தங்களது மகஜர் ஒன்றாயும் கையளித்துள்ளனர். கடவை  ஊழியர்களால் கடமையை புறக்கணித்து வருகின்றமையால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் புகையிரதக் கடவை வழியாக பயணிப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.