ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த விஜய் நடிக்கும் 'கோட்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த முன்னோட்டத்தில் தளபதியும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இளைய தளபதியும் திரையில் தோன்றி மாயஜாலம் செய்வதால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து திரையுலக ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் நான்கு கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' எனும் திரைப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சித்தார்த்தா நூனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் 25 ஆவது படமாக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை அந்நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம்+ கல்பாத்தி எஸ். கணேஷ் + கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எக்சன் எண்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் ஆறாயிரத்திற்கும் அதிகமான பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் படத்தின் கற்பனை மிகு திறன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் பங்கு பற்றினர்.
படத்தை பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், '' ஒரு முழு நீள பொழுதுபோக்கு திரைப்படத்தில் விஜயை பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அது இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. படத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டும் இல்லாமல் கதையும் இருக்கிறது.
இந்தப் படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜயின் அரசியல் கட்சியை பற்றியோ அரசியல் பற்றியோ குறியீடாகவோ, வசனங்களாகவோ எதுவும் இடம்பெறவில்லை. ஏதேனும் ஒரு வகையில் இடம்பெற செய்ய வேண்டும் என்று அவர் எந்த அழுத்தமோ நெருக்கடியோ கொடுக்கவில்லை.
ரி- ஏஜிங் எனும் தொழில்நுட்பத்தின் மூலம் விஜயை, இளைய தளபதியாக திரையில் செதுக்குவதற்கு மீண்டும் மீண்டும் பணியாற்றியதால் படத்தின் முன்னோட்டம் சற்று தாமதமாக வெளியானது. '' என்றார்.
இந்த முன்னோட்டத்தில் 'புது லீடர் வருகிறார்' என்ற வசனம் திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியல் தளத்திலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் 'மருதமலை மாமணியே முருகையா...', 'இனிமே சத்தியமா குடிக்ககூடாதப்பா..' போன்ற வசனங்களும், காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் தளபதியும், இளைய தளபதியும் இணைந்து உச்சகட்ட காட்சியை அதிர செய்யவிருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM