மீராவோடையில் வீட்டுக்கு தீ வைப்பு!

Published By: Digital Desk 7

19 Aug, 2024 | 03:12 PM
image

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடையிலுள்ள வீடொன்று இன்று திங்கட்கிழமை (19) அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலுள்ளோர் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென வீடு  தீப்பற்றியதைக் கண்டு கூக்குரல் இட்டதைத் தொடர்ந்து அயலவர்கள் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஓட்டமாவடி - மீராவோடை - 4 ஆம் வட்டாரம் நூரானியா வீதியிலுள்ள வீடொன்றே இவ்வாறு பகுதியளவில் தீப்பற்றியுள்ளது.

தீப்பரவலை அணைக்கச் சென்ற நபர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், வீட்டிலுள்ள மின்சாரப் பொருட்கள், தளபாடங்கள் பல தீயில் கருகியுள்ளன.

இந்தச் சம்பவம் திருடன் ஒருவனால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீட்டார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீட்டில் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் திருடன் ஜன்னல் வழியாக வந்து அங்கிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ள நிலையில், இன்று திங்கட்கிழமை (19)  திருடன் வீட்டின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பொலித்தீன் வழியாக உட்செல்ல அதற்கு தீ வைத்ததில் இந்த சம்பம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன்,  தீப்பிடிப்பதை கண்டு வீட்டார் எழுந்த போது வீட்டிலிருந்து திருடன் ஓடிச் சென்றதை கண்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.       

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமரிடம் 14 வயதுடைய பாடசாலை மாணவி...

2024-10-15 01:56:57
news-image

உலக முடிவு பள்ளத்தாக்கில் கீழே தள்ளி...

2024-10-14 21:42:22
news-image

சீரற்ற காலநிலையினால் 158,391 பேர் பாதிப்பு;...

2024-10-14 20:21:00
news-image

மட்டக்களப்பில் மோட்டார்சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி...

2024-10-14 20:06:41
news-image

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் வாகனமொன்றினை...

2024-10-14 19:44:07
news-image

ஆயுர்வேத வைத்தியரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை...

2024-10-14 21:39:04
news-image

தமிழரசின் தலைவர், பொதுச்செயலாளர், நிர்வாக செயலாருக்கு...

2024-10-14 21:25:30
news-image

யானை சின்னத்தின் வெற்றிக்கு எவ்வாறு வியூகங்களை...

2024-10-14 17:57:12
news-image

இரவு நேர களியாட்ட விடுதிகளில் சுற்றிவளைப்பு...

2024-10-14 17:44:44
news-image

தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் இன்று...

2024-10-14 17:43:47
news-image

துணைவிமானியை விமானியறையிலிருந்து வெளியே தள்ளிப்பூட்டிய விமானி...

2024-10-14 17:25:55
news-image

குருணாகலில் குளவி கொட்டுக்கு இலக்காகி 39...

2024-10-14 17:27:49