நமது வாழ்வில் ஓர் அங்கமாகும் “தூக்கம்”

Published By: Digital Desk 7

18 Aug, 2024 | 06:32 PM
image

அன்றாட வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கு ஒழுங்கான தூக்கம் அவசியமானதாகும். அந்த வகையில் இலங்கை வாழ் மக்களின் தூக்கப் பழக்கவழக்கம் தொடர்பில் அதிருப்தியான நிலைப்பாடுகள் உள்ளது என மருத்துவத்துறை நிபுணர்கள் கூறி வருகின்றார்கள். 

தூக்கம் நமது உடலில் இழந்த செல்களை புதுப்பிப்பதுடன், மூளையின் செயல்பாட்டிற்கும், நினைவாற்றலுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியின் வளர்ச்சிக்கும், ஹோர்மோன் சுரப்பு சமநிலைக்கும் தேவையானதாக இருக்கிறது.

அசதி, கவனக்குறைவு, ஞாபக மறதி, மன உளைச்சல், இரத்த அழுத்தம் அதிகரிப்பு, இதய நோய், சர்க்கரை நோய், கண் பார்வை குறைபாடு, கல்லீரல் மற்றும் குடல் சார்ந்த நோய்கள் போன்றவற்றிற்கும் தூக்க குறைபாடு காரணமாக இருப்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. தூக்கக் குறைபாடு உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய், மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கின்றன.

இலங்கையில் ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளும் அதில் சுமார் 25 சதவீதமானவை தூக்கம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றார்கள். நல்ல தூக்கம் இல்லாத இந்த போக்கு பல்வேறு உடல் நல பிரச்சனைக்கு வழிவகுக்கும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர் ஏனோகாவிக்கிரமசிங்க கூறுகின்றார்.

மேலும் இவர் தெரிவிக்கையில் தூக்க முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் பல்வேறு உட ன மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன இதன் காரணமாக மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பாடசாலைகள் செல்லும் மாணவர்களுக்கு நிலையான நிலை மாற்றல் ஏற்படுத்துவதற்கும் நல்ல தூக்கம் அவசியம் எனவே பிள்ளைகள் நல்ல ஆழ்ந்த குழப்பமற்ற உறக்கத்தை பெறுவதை உறுதிப்படுத்துவது பெற்றோரின் பொறுப்பாகும் பெரும்பாலான பெற்றோர்கள் தமது அன்றாட வேலைகளில் ஈடுபட அதிக நேரத்தை செலவழித்து இந்த நிலையில் தங்களது வேலைகளை இலகுவாக முன்னெடுப்பதற்காக அவர்கள் தங்களது குழந்தைகளிடம் மொபைல் போன்களை வழங்குகின்றார்கள்.

இதனால் அதற்கு அடிமையாகும் போக்கு குழந்தை இடத்தை ஏற்படுகிறது இதனால் அவர்களின் மனநிலையில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதோடு தூக்கமும் தொலைகிறது. இது குறித்து பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் செயற்படுவது காலத்தின் தேவையாகும்.

தினமும்  நபரொருவர் 7 முதல் 8மணி நேரம் தூங்குபவர்களுக்கு நோயின் தாக்கத்தை எதிர்கொள்ளும் சக்தி கிடைக்கிறது. ஆகவேநமது உடல் நலம், மன நலம் போன்றவற்றுக்கு உணவு, உடை, உறையுள் போன்றவை எந்தளவு அவசியமோ தூக்கமும் அதே அளவு அவசியமானதே.

கிறிஸ்றீனா சகாயதாசன்

ஊடகத்துறை 

யாழ்.பல்கலைக்கழகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14
news-image

யூஸ்டாச்சியன் குழாய் செயலிழப்பு எனும் காதில்...

2025-01-30 14:26:30
news-image

தழும்புகளில் ஏற்படும் வலிக்கான நிவாரண சிகிச்சை

2025-01-29 20:45:31
news-image

செர்வியோஜெனிக் தலைவலி பாதிப்புக்கான சிகிச்சை 

2025-01-27 19:26:02
news-image

மெரால்ஜியா பரேஸ்டெடிகா எனும் தொடை பகுதியில்...

2025-01-25 16:23:10
news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32
news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43
news-image

செபோர்ஹெக் டெர்மடிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2025-01-20 17:51:49
news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52