இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடருக்கு முன்னரான நான்கு நாள் பயிற்சிப் போட்டியில் இலங்கை தோல்வி

17 Aug, 2024 | 08:58 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளைக் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் விளையாடும் பொருட்டு அங்கு பயணமான இலங்கை அணி, வூஸ்டர்ஷயரில் இன்று நிறைவுக்கு வந்த 4 நாள் பயிற்சிப் போட்டியில் 7 விக்கெட்களால் தோல்வி அடைந்தது.

பிரபல்யம் அடையாத வீரர்களைக் கொண்ட இங்கிலாந்து லயன்ஸ் அணியிடம் அடைந்த இந்தத் தோல்வி இலங்கைக்கு பேரிடியைக் கொடுத்துள்ளது.

எனினும், டெஸ்ட் தொடரில் திறமையாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா தெரிவித்தார்.

ஆகஸ்ட் 14ஆம் திகதி ஆரம்பித்து நான்காம் நாள் பகல் போசனத்துக்கு முன்னதாக நிறைவடைந்த இந்தப் போட்டியில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 136 ஓட்டங்களுக்கு சுருண்டதாலேயே தோல்வியைத் தழுவியது.

எவ்வாறாயினும் இரண்டாவது இன்னிங்ஸில் நிஷான் மதுஷ்க, திமுத் கருணாரட்ன, ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா ஆகியோர் திறமையாக துடுப்பெடுத்தாடி, டெஸ்ட் தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும் என்ற சமிக்ஞையைக் கொடுத்துள்ளனர்.

இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி மென்ச்செஸ்டர் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் எதிர்வரும் புதன்கிழமை (21)ஆரம்பமாகவுள்ளது.

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 139 (திமுத் கருணாரட்ன 26, ப்ரபாத் ஜயசூரய 20, மிலான் ரத்நாயக்க 17, ஸமான் அக்தர் 32 - 5 விக்., ஜொஷ் 30 - 3 விக்.)

இங்கிலாந்து லயன்ஸ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 324 (91, கேசி ஆல்ட்றிஜ் 78, பென் மெக்கின்னி 46, ரொப் யேட்ஸ் 25, ப்ரபாத் ஜயசூரிய 102 - 5 விக். கசுன் ராஜித்த 51 - 2 விக்.)

இலங்கை 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 306 (நிஷான் மதுஷ்க 77, தனஞ்சய டி சில்வா 66, ஏஞ்சலோ மெத்யூஸ் 51, திமுத் கருணாரட்ன 43, சதீர சமரவீர 25, பர்ஹான் அஹ்மத் 87 - 3 விக்., லிண்டன் ஜேம்ஸ் 34 - 2 விக்., ஜொஷ் ஹல் 44 - 2 விக்., ஸமான் அக்தர் 59 - 2 விக்.)

இங்கிலாந்து லயன்ஸ் - வெற்றி இலக்கு 122 -  2ஆவது  இன்: 122 - 3 விக். (ரொப் யேட்ஸ் 57 ஆ.இ., ஜேம்ஸ் ரியூ 23, பென் மெக்கின்னி 20, தனஞ்சய டி சில்வா 37 - 2 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52