தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க இன்று (17) முற்பகல் கொழும்பு வெள்ளவத்தை காலி வீதியில் உள்ள மஹா சங்க சபை செயலாளர் அலுவலகத்தில் இலங்கை அமரபுர மஹா சங்க சபையின் உபதலைவர் அதிசங்கைக்குரிய மாகல்லே நாஹித மஹா நாயக்க தேரரை சந்தித்தார்.
இதன்போது நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி கலந்துரையாடிய அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெறுவதற்காக தேரரிடம் நல்லாசி பெற்றுக்கொண்டார்.
இந்த சந்திப்பில் இலங்கை மஹா சங்க சபையின் உதவி பதிவாளர் கலைமுதுமாணி சங்கைக்குரிய அஹங்கம மைத்திரிமூர்த்தி நாயக்க தேரர், அமரபுர சத்தம்மயுத்திக மாத்தறை தரப்பின் தென்னிலங்கையின் பிரதான சங்க நாயக்க கலைமுதுமாணி சங்கைக்குரிய பெரகம விமலபுத்தி நாயக்க தேரர், இரத்மலானை ஸ்ரீ போதிருக்காராமாதிபதி கலைமுதுமாணி சங்கைக்குரிய இரத்மலானை ராஹுல நாயக்க தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் இணைந்திருந்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியும் இதில் கலந்துகொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM