இன்றைய சூழலில் எம்முடைய இளம் தலைமுறையினர் தங்களது வாழ்க்கை நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டதால்... பிறக்கும் பச்சிளம் குழந்தைகள் பல சவால்களை எதிர்கொள்கின்றன. இதிலிருந்து அவர்களை பாதுகாக்க, பிறந்தவுடன் நியூ பார்ன் ஸ்கிரீனிங் டெஸ்ட் என்ற குருதி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மெத்த படித்த இளம் பெண்மணிகளுக்கும், இத்தகைய பரிசோதனை ஏன் மேற்கொள்ளப்படுகிறது? என தெரிவதில்லை. மேலும் பல பெற்றோர்களுக்கும் இத்தகைய குருதி பரிசோதனை ஏன் மேற்கொள்ளப்படுகிறது? என்பது குறித்த முழுமையான விழிப்புணர்வும் இல்லை. இந்நிலையில் இது தொடர்பாக குழந்தைகள் நல நிபுணர்கள் இத்தகைய பரிசோதனை ஏன் மேற்கொள்ளப்படுகிறது? என்பதற்கு பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.
உங்களது பிள்ளை தனியார் வைத்திய சாலையிலோ அல்லது அரசாங்க அனுசரணையுடன் கூடிய வைத்திய சாலையிலோ பிறந்தால்.. சில தினங்களுக்குள் அவர்களுடைய பாத பகுதியில் இருந்து பிரத்தேகமான முறையில் நியூ பார்ன் ஸ்கிரீனிங் டெஸ்ட் எனும் பெயரில் சில துளிகள் கொண்ட குருதி பரிசோதனையை மேற்கொள்வார்கள்.
இத்தகைய குருதி பரிசோதனையின் மூலம் பிறந்திருக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு தைரொய்ட் ஹோர்மோன், மூளை வளர்ச்சி, பாலினத்தை உறுதிப்படுத்தும் ஹோர்மோன், மரபணு தொடர்பான கோளாறுகள் மற்றும் ரத்தம் தொடர்பான இடையூறுகள் ஆகியவற்றை குறித்து இந்த பரிசோதனைகளின் மூலம் துல்லியமாக அவதானிக்க முடியும். மேற்கூறியவற்றில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால்... அதனை தொடக்க நிலையிலே கண்டறிந்து அதற்குரிய நிவாரண சிகிச்சையை வழங்க இயலும்.
இத்தகைய பரிசோதனை ஏன் அவசியம்? என எம்மில் பலரும் வினா எழுப்புகிறார்கள். இதற்கு எளிதாக பதில் அளிக்க வேண்டும் என்றால்... எம் மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து அயலகத்தில் வாழ்பவர்கள் .. அங்குள்ள நிலவியல் சூழல் படி வளர்ந்திருக்கும் ஆணையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்து கொள்கிறார்கள். இணைய வசதி அதிகரித்திருக்கும் இந்த தகவல் தொழில்நுட்ப சூழலில் இந்த போக்கு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இது போன்ற வேறு வேறு நிலவியல் பின்னணியில் உள்ளவர்கள் இல்லற வாழ்க்கையில் இணையும் போது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணு தொடர்பான பாதிப்புகள் ஏற்படுகிறது என ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் ...இத்தகைய நியூ பார்ன் ஸ்கிரீனிங் டெஸ்ட் செய்து கொள்வது அவசியம் என வைத்திய நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். மேலும் இத்தகைய பரிசோதனையை பிள்ளை பிறந்து ஆறு மாதத்திற்குள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பிறந்த உடனேயே இத்தகைய பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் பிள்ளைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதனை உடனடியாக களைவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதையும் பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
- வைத்தியர் ஸ்ரீதேவி
தொகுப்பு - அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM