பாதகாதிபதி தோஷம் நீங்குவதற்கான எளிய பரிகாரம்...!?

17 Aug, 2024 | 02:54 PM
image

எம்மில் பலருக்கும், 'பாதகாதிபதி தோஷம் ஏற்பட்டிருக்கிறது' என சோதிட நிபுணர்கள் விவரித்து இருப்பார்கள். உடனே நாம்  அதற்கான பரிகாரம் என்ன? என்பதனை கேட்டுக்கொண்டு அதனையும் நிறைவேற்றுவோம். இந்நிலையில் பாதகாதிபதி என்றால் என்ன? என்பதனை தெரிந்து கொள்ளவும்... அதன் மூலமாக ஏற்படும் தோஷம் எப்படி ஏற்படுகிறது ?என்பதனையும் தெரிந்து கொண்டால்... நீங்கள் உங்கள் பரிகாரத்தை மனம் உருக செய்து, அந்த தோஷத்தில் இருந்து விலகி, சுப பலன்களை பெறுவீர்கள். இந்தத் தருணத்தில் பாதகாதிபதி தோஷம் குறித்தும் , அதற்கான எளிய பரிகாரங்கள் குறித்தும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள். 

பாதகம் என்றால் 'கெடுதல்' என பொருள். அதனால் நீங்கள் எந்த லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்பதனை பொறுத்துதான் உங்களுடைய பாதகாதிபதி யார்? என்பது தெரியவரும். நீங்கள் சர ராசி என குறிப்பிடப்படும் மேஷம்- கடகம் -துலாம் -மகரம் -ஆகிய நான்கு லக்னங்களில் பிறந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய லக்னத்திலிருந்து பதினொன்றாம் வீட்டின் அதிபதி தான் பாதகாதிபதியாக வருவார்.  உதாரணத்திற்கு நீங்கள் மேஷ லக்னமாக இருந்தால் உங்களுடைய லக்னத்தில் இருந்து பதினோராம் இடமான கும்பம் பாதக ஸ்தானமாகவும், அந்த வீட்டின் அதிபதியான சனி பகவான் பாதகாதிபதியாகவும் வருவார். 

ஸ்திர ராசி என குறிப்பிடப்படும் ரிஷபம்- சிம்மம் -விருச்சிகம்- கும்பம் -ஆகிய நான்கு லக்னங்களில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் என்றால்... உங்களுடைய லக்னத்திலிருந்து ஒன்பதாம் வீட்டின் அதிபதி பாதகாதிபதியாக வருவார். உதாரணத்திற்கு நீங்கள் சிம்ம லக்னத்தில் பிறந்திருந்தால் உங்களுடைய லக்னத்தில் இருந்து ஒன்பதாம் இடமான மேஷ வீடு பாதக ஸ்தானமாகவும், அந்த வீட்டின் அதிபதியான செவ்வாய் பாதகாதிபதியாகவும் வருவார். 

உபய ராசி என குறிப்பிடப்படும் மிதுனம் - கன்னி -தனுசு- மீனம் -ஆகிய நான்கு லக்னங்களில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் என்றால் ... உங்களுடைய லக்னத்திலிருந்து ஏழாம் வீட்டின் அதிபதி பாதகாதிபதியாக வருவார். உதாரணமாக தனுசு லக்னத்தில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் என்றால்... உங்களுடைய லக்னத்திலிருந்து ஏழாம் இடமான மிதுனம் பாதக ஸ்தானமாகவும், அந்த வீட்டின் அதிபதியான புதன் பாதகாதிபதியாகவோ வருவார். 

தற்போது தோஷத்திற்கு வருவோம் . பாதகாதிபதிகள் உங்களுடைய லக்னத்திலிருந்து ஆறு- எட்டு -பன்னிரெண்டு - ஆகிய இடங்களில் இருந்தாலும் அல்லது இந்த இடங்களில் மாந்தி இருந்தாலும் அல்லது உங்களது பாதகாதிபதியுடன் மாந்தி சேர்க்கை பெற்றிருந்தாலும் உங்களுக்கு பாதகாதிபதி தோஷம் ஏற்படும். 

இதனால் செய்வினை தோஷம் உங்களையும் அறியாமல் உங்களை பற்றி கொள்ளும். மேலும் கண் திருஷ்டியும் ஆக்கிரமிக்கும்.  இதனால் வாழ்க்கையில் வெற்றியும் தடைபடும். முன்னேற்றமும் தடைபடும். நிம்மதியும் தடைபடும். இதனால் இந்த தோஷத்திற்கு பரிகாரத்தை செய்து கொள்ள வேண்டும்.  

பௌர்ணமி மற்றும் அமாவாசை ஆகிய தினங்களில் பிரத்யங்கீரா தேவியை வழிபட வேண்டும். மேலும் இந்த இரு தினங்களில் பிரத்யங்கீரா தேவிக்கு யாகம் வளர்த்தால் அதிலும் குறிப்பாக மிளகாய் வற்றலைக் கொண்டு யாகம் செய்தால்... அல்லது அதில் பங்கு பற்றினாலும் உங்களது பாதகாதிபதி தோஷம் விலகும். நீங்கும். பௌர்ணமி, அமாவாசை தினங்களில் பிரத்யங்கீரா தேவியின் சன்னதியிலோ அல்லது ஆலயத்திலோ நடைபெறும் பிரத்யேக யாகத்தில் பங்குபற்ற இயலாத நிலை இருந்தால்... செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தொடர்ச்சியாக பிரத்யங்கீரா தேவியை வழிபட்டு வந்தாலும் இந்த பாதகாதிபதி தோஷம் விலகும். அதன் பிறகு உங்களது முன்னேற்றமும், வளர்ச்சியும் சாத்தியமாகும். 

தொகுப்பு : சுபயோக தாசன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செல்வத்தை வாரி வழங்கும் பைரவர் வழிபாடு..!?

2025-03-22 16:55:33
news-image

மீளா கடன் பிரச்சனையிலிருந்து மீள்வதற்கான நூதன...

2025-03-21 15:58:28
news-image

உங்களது வங்கிக் கணக்கில் தன வரவு...

2025-03-20 15:32:20
news-image

வெற்றிகளை குவிக்கும் வெற்றிலை ரகசியம்!

2025-03-19 15:46:41
news-image

கடன் பிரச்சினைகள் எளிதாக நீங்குவதற்கு சூட்சும...

2025-03-18 17:17:07
news-image

துர்க்கை அம்மனின் அருளைப் பெறுவதற்கான பிரத்யேக...

2025-03-17 16:50:00
news-image

சாமிமலை ஓல்டன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய...

2025-03-16 15:56:46
news-image

நவகிரக தோஷம் விலகுவதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2025-03-15 16:45:43
news-image

அரசாங்கத்தின் அனுசரணை கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-13 19:57:31
news-image

எதிரி தொல்லையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான சூட்சம...

2025-03-12 15:11:37
news-image

கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-03-12 13:46:57
news-image

காரியம் வெற்றி பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-11 17:36:35