விஜய் நடிக்கும் 'கோட் GOAT' திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக் குழு

17 Aug, 2024 | 12:14 PM
image

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் விஜய் நடிக்கும் 'கோட் -GOAT' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகும் திகதியை படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்துடன் உற்சாகமாக அறிவித்துள்ளனர். 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'கோட் - GOAT' எனும் திரைப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம் , சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சித்தார்த்தா நூனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். விஜய் இரட்டை வேடத்தில் தோன்றும் இந்த எக்சன் என்டர்டெய்னர் திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் நாளை அதாவது ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதியன்று வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், '' விஜய் -வெங்கட் பிரபு - யுவன் - கூட்டணி நிகழ்த்தியிருக்கும் மேஜிக்கின் சிறு பகுதியை சனிக்கிழமையன்று வெளியிடுகிறோம். கோட் திரைப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றிருக்கிறது. இந்த முன்னோட்டமும் ரசிகர்களிடத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் 22 தியேட்டர்களில் அஜித்தின் ‘மங்காத்தா’...

2026-01-21 17:47:56
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'லஷ்மி காந்தன்...

2026-01-21 15:41:09
news-image

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும்...

2026-01-21 15:33:09
news-image

ஏப்ரலில் வெளியாகும் டொவினோ தோமஸ் நடிக்கும்...

2026-01-21 14:59:50
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-01-21 10:06:37
news-image

நடிகர் கார்த்திகேசன் நடிக்கும் 'அறுவடை' படத்தின்...

2026-01-21 09:37:08
news-image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட நடிகர்...

2026-01-21 09:21:28
news-image

சசிகுமார் நடிக்கும் ' மை லார்ட்'...

2026-01-21 09:07:23
news-image

கவின் உடன் இணையும் சாண்டி மாஸ்டர்

2026-01-19 17:50:56
news-image

டொவினோ தோமஸ் நடிக்கும் 'அதிரடி' படத்தின்...

2026-01-19 17:44:24
news-image

ஐந்து இந்திய மொழிகளில் "அனந்தா" பாபா...

2026-01-19 16:57:36
news-image

நடிகர் அண்டனி வர்கீஸ் நடிக்கும் 'கட்டாளன்'...

2026-01-17 17:40:39